onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Friday, July 26, 2019

மஹிந்த முகாமிற்கு மீண்டும் பல்டியடித்தார் அங்கஜன்?: நாமலின் யாழ் விஜயத்திற்கு ஏற்பாடு!

  admin       Friday, July 26, 2019


தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் வடக்கு நோக்கிய விஜயத்தை மஹிந்த தரப்பு ஆரம்பித்துள்ளது. வடக்கு நோக்கிய விஜயம் நாமல் தலைமையிலான குழு மேற்கொள்கிறது.

வடக்கு மக்களின் நாடித்துடிப்பை அறியும் நோக்கத்துடன் இந்த விஜயத்தை நாமல் தரப்பு ஆரம்பிப்பதாக தமிழ் பக்கம் அறிந்தது.

வரும் 29ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வரும் நாமல் தலைமையிலான குழு, மதத்தலைவர்கள், பொது அமைப்புக்களை சந்திக்கவுள்ளது. யாழ் ஆயர், நல்லை ஆதீன முதல்வர், யாழ் நாகவிகாரை விகாராதிபதி உள்ளிட்ட மதத்தலைவர்களை சந்திக்கிறார்.

கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்றிலும் கலந்து கொள்வார்.

இதேவேளை, மஹிந்த தரப்பிலிருந்து கடந்த தேர்தலுடன் மைத்திரி தரப்பிற்கு பல்டியடித்த அங்கஜன் இராமநாதன் மீண்டும் நாமல் தரப்பிற்கு பல்டியடித்துள்ளது. நாமலின் விஜயத்தில் சில உள்ளக சந்திப்புக்களை அங்கஜன் இராமநாதனும் செய்துள்ளதாக தெரிய வருகிறது. வடமராட்சி பகுதியில் அங்கஜனின் ஏற்பாட்டில் திங்கள் மாலையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

வடமாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவும் நாமலின் சந்திப்பு ஏற்பாடுகளில் பங்கு கொண்டுள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மஹிந்த முகாமிற்கு மீண்டும் பல்டியடித்தார் அங்கஜன்?: நாமலின் யாழ் விஜயத்திற்கு ஏற்பாடு!

Previous
« Prev Post