onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Tuesday, July 30, 2019

நோயாளி என்னை மிரட்டியதாலேயே உறவு கொண்டேன்’: பாலியல் புகாரில் சிக்கிய யாழ் பெண் வைத்தியர் பரபரப்பு தகவல்!

  admin       Tuesday, July 30, 2019


சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவரே தன்னை அச்சுறுத்தி  உறவு கொள்ள வைத்ததாக கனடாவில் மருத்துவராகப் பணிபுரிந்து மருத்துவ உரிமத்தை இழந்த தீபா சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணாண தீபா சுந்தரலிங்கம், கனடாவில் குடியிருக்கிறார். அங்கு மருத்துவ பட்டம் பெற்று,ரொறொன்ரோ மருத்துவமனையில் கடமையாற்றி வந்தார். இதன்போது, புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டிற்கு இலக்கானார். அது தொடர்பான நீண்ட விசாரணையின் முடிவில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் அவரது மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டது. நீண்ட மௌனத்தின் பின்னர், தன்மீதான குற்றச்சாட்டை தீபா மறுத்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

“சிகிச்சைக்காக வந்த ஒருவர் என்னை மிரட்டினார். ஆபாச செல்பிக்களை அனுப்பச் சொன்னார். குறுஞ்செய்திகளை மருத்துவக் கவுன்சிலுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியே பாலியல் உறவு கொள்ள வைத்தார்” என்று புற்றுநோய் மருத்துவரான தீபா சுந்தரலிங்கம் தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளார்.

தீபா சுந்தரலிங்கத்திற்கு தற்போது 37 வயதாகிறது. புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நிபுணராக செயற்பட்டு வருகிறார். 2010 முதல் மருத்துவராக பணியாற்றும் தீபாவிடம் சிகிச்சை பெற கடந்த 2015 ஆம் ஆண்டு நோயாளி ஒருவர் சென்றார். .

அந்த நோயாளிக்கு புற்றுநோய் தாக்கம் இருந்தது சோதனைகளில் தெரிய வந்தது. அன்று முதலே இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர் என்றும் வெளியில் சுற்றியுள்ளனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர் என்றும் புற்று நோய்க்கு தீபா சிகிச்சை அளித்தார் என்றும் கூறப்பட்டது.

2015 ஆம் ஜனவரி முதல் 2016 மார்ச் வரை 23 முறை சிகிச்சை அளித்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில் திடீரென தான் சிகிச்சை அளிக்கும் நோயாளிகள் பட்டியலில் இருந்த அந்த நோயாளியின் பெயரை தீபா நீக்கினார். அதன்பின்னர்தான் விதி தீபாவின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது.

தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார் என்றும், சிகிச்சைக்கு வந்த போது தன்னுடன் உறவு கொண்டார் என்றும் தீபா மீது அந்த நோயாளி குற்றச்சாட்டை முன் வைத்தார். தன்னை கைவிட்டு விட்டதாகவும் வேறொரு நபரை காதலிப்பதாக கூறிய அவர் தன்னை நோயாளிகள் பட்டியலில் இருந்தே நீக்கிவிட்டதாகவும் கூறினார்.

மருத்துவதுறை குற்றச்சாட்டுக்களை ஆராயும் College of Physicians and Surgeons இல் தீபா மீது முறைப்பாடு அளித்த அந்த நோயாளி, “நான் உடல் ரீதியாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன். ஒரு முக்கியமான உறவு இழப்பு என்னை பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. தீபா என்னை விட்டு விலகியதோடு மட்டுமல்லாமல் எனக்கு சிகிக்சை அளிக்கவும் மறுத்து விட்டார்” எனவும் தனது தரப்பிலான முறைப்பாட்டை அறிக்கையாக சமர்பித்தார்.

இது தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது தீபா மௌனமாகவே இருந்தார். பதில் எதுவும் கூறவில்லை.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தீபாவின் மருத்துவ உரிமம் இரத்துச் செய்யப்பட்டதோடு அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து கனடாவில் இவர் மருத்துவராக சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆறு மாதங்கள் கழித்து மருத்துவர் தீபா தனது தரப்பு நியாயத்தினை முன் வைத்துள்ளார். அதாவது “நடந்த சம்பவத்தில் தான் குற்றவாளி அல்ல என்றும் பாதிக்கப்பட்டவரே நான்தான்” என்றும் அவர் கூறியுள்ளார்.

தன்னை உணர்வு ரீதியாக கட்டுப்படுத்தி அந்த நோயாளி பயன்படுத்திக்கொண்டார் என்றும் ஆபாச செல்பிக்களை மிரட்டி அனுப்ப வைத்தார் என்றும் முறையிட்டுள்ளார்.

குறித்த நோயாளி தன்னுடன் உறவு கொள்ளாவிட்டால் தான் அனுப்பிய குறுச்செய்திகள், ஔிப்படங்களை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பி விடுவதாகவும் தான் அச்சுறுத்தப்பட்டதாகவும் தீபா கூறியுள்ளார்.

அவமானத்தினால் தான் கூனி குறுகிப்போய் நின்றதால்தான் பேசமுடியவில்லை என்றும் தனது தரப்பு நியாயத்தையும் நீதிமன்றம் கேட்கவேண்டும் என்றும் தீபா முறையிட்டுள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நோயாளி என்னை மிரட்டியதாலேயே உறவு கொண்டேன்’: பாலியல் புகாரில் சிக்கிய யாழ் பெண் வைத்தியர் பரபரப்பு தகவல்!

Previous
« Prev Post