onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Thursday, July 11, 2019

வைத்தியர் ஷாபியின் கருத்தடை குற்றச்சாட்டை ஆராய புதிய குழு!

  admin       Thursday, July 11, 2019


குருநாகல் வைத்தியர் ஷாபி மீதான கருத்தடை சத்திரசிகிச்சை விசாரணையை இடைநிறுத்தும்படி குருநாகல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதும், கொழும்பு பல்கலைகழகத்தை சேர்ந்த ஐவர் கொண்ட விசாரணைகுழுவை அமைக்கவும் உத்தரவிட்டார்.

நேற்று வைத்தியர் ஷாபி குருநாகல் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ஏற்கனவே ஷாபி தொடர்பான விசாரணையை சுகாதார அமைச்சின் விசாரணைக்குழுவொன்று மேற்கொண்டு வருகிறது. அந்த குழுவிற்கு எதிரான ஆட்சேபணை மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதை ஆராய்ந்த நீதவான், தற்போதைய குழுவின் விசாரணைகளை இடைநிறுத்த உத்தரவிட்டதுடன், கொழும்பு பல்கலைகழகத்தின் மருத்துவபீடத்தை சேர்ந்த ஐந்து பேராசிரியர்களை கொண்ட குழுவை நியமிக்க உத்தரவிட்டார்.

அத்துடன், ஷாபியின் சொத்துக்களை மதிப்பீடு செய்யவும் உத்தரவிட்டார்.

அத்துடன், ஷாபியின் பிணை கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.


logoblog

Thanks for reading வைத்தியர் ஷாபியின் கருத்தடை குற்றச்சாட்டை ஆராய புதிய குழு!

Previous
« Prev Post