onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Friday, July 5, 2019

முல்லைத்தீவு குண்டுவெடிப்பு: பின்னணி என்ன தெரியுமா?

  admin       Friday, July 5, 2019


முல்லைத்தீவு கேப்பாபிலவு பிரம்படி வயல்வெளியில் நேற்று இரவு இ்ம்பெற்ற குண்டு ஒன்று வெடிப்பு சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யுத்தகாலத்தில் வெடிக்காமலிருந்த குண்டு ஒன்றே, நெருப்பு மூட்டப்பட்டதால் வெடித்து சிதறியுள்ளது.

கேப்பாபிலவு பிரம்படி வயல் வெளியின் ஒரு பகுதியை இயந்திரத்தின் மூலம் துப்பரவு செய்த விவசாயியொருவர், குப்பைகளுக்கு நெருப்பு மூட்டிவிட்டு சென்றுள்ளார். நெருப்பின் வெப்பத்தில் இரவு 9 மணியளவில், நிலத்தில் புதையுண்டிருந்த பெரிய குண்டொன்று வெடித்து சிதறியுள்ளது.

இறுதி யுத்த சமயத்தில் வீசப்பட்ட குண்டுடொன்றாக இருக்கலாமென கருதப்படுகிறது. அனேகமாக விமானக்குண்டு ஒன்றாகவும் இருக்கலாமென கருதப்படுகிறது.

சுமார் ஒரு மீற்றர் ஆழம், இரண்டு மீற்றர் அகலத்திற்கு அங்கு பெரும் குழி தோன்றியுள்ளது.

முள்ளிவாய்க்கல், புதுக்குடியிருப்பு, மாத்தளன், முல்லைத்தீவு, முள்ளியவளை, வற்றாப்பளை, மண்ணாகண்டல் வரையான கிராமங்களில் உள்ள மக்கள் குண்டுச்சத்தத்தால் அச்சமடைந்திருந்தனர். அத்துடன், வீடுகள் அதிர்ந்துள்ளன. சத்தத்தையடுத்து 119 அவசர இலக்கத்திற்கு பொதுமக்கள் அறிவித்ததையடுத்து, பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.



logoblog

Thanks for reading முல்லைத்தீவு குண்டுவெடிப்பு: பின்னணி என்ன தெரியுமா?

Previous
« Prev Post