Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 13 ஜூலை, 2019

அடையாள யுத்தத்தில் சரணாகதி அடைவதா தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு-தவராசா தர்ஸன் ,தமிழர் மேம்பாட்டு பேரவை.

  admin       சனி, 13 ஜூலை, 2019


அண்மைக் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறான சுயலாப அரசியல் முடிவுகளை செயற்படுத்துவதும் இளையோர் மாற்று தலைமை தொடர்பாக முக நூல் பரப்புரை செய்து வருவதும் இயல்பாகிவிட்ட நிலையில் வெறும் முகநூல் பிரச்சாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பினை கட்டமைப்பு மற்றும் தொழில்பாட்டு ரீதியாக மாற்றுமா என்றால் சாத்தியம் இல்லை தோன்றுகிறது.

மாற்று தலைமைக்காக குரல் கொடுப்பவர்கள் எவ்வளவு தூரம் செயற்திறன் உடையவர்கள் என்றால் உள்ளுராட்சி சபைகளின் கதிரைகளை நிரப்புவதையும் வாயால் வடை சுடுவதையும் தவிர வேறொன்றும் இல்லை.

அவ்வாறு எனின் இளைஞர்கள் முதியவர்கள்  கிராம மட்டத்தில் அரசியல் கலந்துரையாடலை கட்சி பக்திக்கு அல்லது அரசியல் தலைவருடைய விசுவாச உணர்வுக்கு அப்பால் நடத்தப்பட்டு தமிழ் மக்களை கொள்கையின்பால் அணி திரட்ட வேண்டும். 
அதன் மூலமே மாற்றத்தை கொண்டு வர முடியும்.

எனினும் மாற்று அணி என்பது தொடர்பான தெளிவு செயற்பாட்டாளருக்கு இருக்க வேண்டும் ஏனெனில் சிங்கள ஏகாதிபத்திய உணர்வை வலுவூட்டுவதற்காகவே தமிழ் தேசிய உணர்வு சில முகவர்கள் ஊடாக ஊட்டப்படும் அதே நேரம் அவர்களுடைய உணர்வூட்டலுக்கு உள்ளானவர்கள் பிரத்தியேகமான கண்காணிப்பு உட்படுத்த படுகிறார்கள் .

இதன் ஊடாக அரசு தமிழர்களின் இயங்கியலை கட்டுப்படுத்த முனைவதுடன் சிறுபான்மை இனங்களை சிறுபான்மையாக தக்க வைப்பதற்கான காய் நகர்த்தலை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் மறுபுறம் விகாரைகளை அமைப்பது மகாவலி அபிவிருத்தித்தி ஊடாக  காணி உள்ளிட்ட அதிகாரங்களை சுவீகரிப்பு செய்வது போன்ற அடையாள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன் கொண்டு செல்வதுடன் தேவைக்கு ஏற்ப முஸ்லிம் தமிழ் இன குரோத வளர்ப்பையும் ஏற்படுத்த பின் நிற்கவில்லை. 

அது மாத்திரமல்ல தமிழ் மக்களிடையே காணப்படும் குல பேதம் பிரதேச வாதம் மத வாதம் போன்ற பிரிவினைகளை தூண்டி தமிழ் மக்கள் வரலாற்றில் ஒரு குடையின் கீழ் அணி திரள முடியாத பின் தள வேலைகளை மிக துல்லியமாக திட்ட மிட்டு எம்மவர்களை கொண்டே இன அடையாள சிதைவினை உண்டு பண்ணி வருகிறது. 

இதன் ஊடாக முஸ்லிம் மக்களுடன் வாழ்வதற்கு போராடும் மனப்பாங்கினை தோற்றுவிப்பதன் ஊடாக சுதந்திரம் தன்னாட்சி உரிமை போன்றவற்றின் மீதுள்ள கவனத்தை கலைப்பதற்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது. 

புலம் பெயர்ந்த தமிழர்களில் சிலரை அரவணைத்துக்கொண்டு வடக்கில் முதலீடும் அபிவிருத்தியும் என்ற போர்வையில் தென் இலங்கை முதலீட்டையும் பிற இன தொழில் வாய்ப்பு களையும் ஊக்கிவிப்பதன் ஊடு இன செறிவாக்கலை உண்டு பண்ண அரசு முனைகிறது.

எப்போதும் எங்கள் கைகளாலே எங்கள் கன்னங்களில் அடிக்க வைக்கும் கலையை கொண்டுள்ள ஏகாதிபத்தியம் தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைத்து பல சில்லறை பெட்டிகடை முதலாளிகளை உருவாக்கி தந்துள்ளது. 

அவர்களும் வசதிகளுக்கும் கார் பேமிற்றுக்கும் முண்டி அடிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதன் ஊடாக அரசியல் பேரம் பேசும் ஆற்றல் தமிழ் மக்கள் இழந்துள்ளார்கள்.

இந்நிலையில் இளைஞர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீள புனரமைப்பு செய்வதற்கான அழுத்தம் வழங்க போகிறார்களா மாற்று அணி உருவாக்க போகிறார்களா இல்லை அரசியல் வாதிகளை விடுத்து சனநாயக மக்கள் இயக்கம் ஒன்றின் ஊடாக அரசு டன் பேரம் பேசும் ஆற்றல் வளர்க்க போகிறார்களா இல்லை முகநூல் அரசு நடத்த போகிறார்களா இல்லை இரண்டறக் கலந்து சரணாகதி அடையப் போகிறார்களா என்பது அவர்களின் செயற்பாடுகளிலேதான் தங்கியுள்ளது.

 சனநாயக அடையாள ஆக்கிரமிப்பு போரில் சிதைந்து சரணாகதி அடைய கூடாது என்றால் தமிழ் மக்கள் ஒரு முடிவினை மேற்கொள்வதற்கான இறுதி சந்தர்ப்பம் இது வாக தான் இருக்கும். அவ்வாறு ஒரு நிலை ஏற்படும் வரை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! அடையாள யுத்தத்தில் சரணாகதி அடைவதா தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு-தவராசா தர்ஸன் ,தமிழர் மேம்பாட்டு பேரவை.

Previous
« Prev Post