onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Friday, July 5, 2019

திருக்கேதீச்சர ஆலய வளைவு அமைப்பதை மன்னார் ஆயரே நேரடியாக தடுத்து நிறுத்தினார்: அம்பலப்படுத்தினார் தவிசாளர்!

  admin       Friday, July 5, 2019


மன்னார் திருக்கேதீச்சர ஆலய வளைவு அமைப்பதற்கு பிரதேசசபையால் வழங்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் என்னிடம் கேட்டுக் கொண்டார். ஆயர் இல்லத்திற்கே என்னை வரவழைத்து கேட்டார். இதன் பின்னரே வழங்கிய அனுமதியை இடைநிறுத்தினேன் என உண்மையை போட்டுடைத்தார் மன்னார் பிரதேசசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜஹீர்.

திருக்கேதீச்சர ஆலய வளைவு சில மாதங்களின் பின்னர் கத்தோலிக்க கும்பல் ஒன்றினால் அடித்து உடைக்கப்பட்டிருந்தது. பின்னர், அந்த இடத்தில், நிரந்தர வளைவு அமைக்க மன்னார் பிரதேசசபை அனுமதி வழங்கியது. ஆனால் அடுத்த நாளே பல்டியடித்து, வழங்கிய அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மன்னார் பிரதேசசபை தவிசாளர் அறிவித்தார்.

அங்குள்ள சில கத்தோலிக்க அமைப்புக்களின் அழுத்தம் காரணமாக இந்த அறிவிப்பு வெளியானதா என சந்தேகம் வெளியிடப்பட்டு வந்த நிலையில், நடந்த உண்மைகளை போட்டுடைத்துள்ளார் தவிசாளர்.

திருக்கெதீச்சர ஆலய வளைவு சம்பந்தமான, மன்னார் பிரதேசசபையின் சிறப்பு அமர்வு நேற்று முன்தினம் (4) நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய தவிசாளர்,
திருக்கேதீச்சர வளைவு தொடர்பான தகவல்களின்படி 2014 பெப்ரவரி 24ம் திகதி வளைவு அமைக்க அனுமதிக்கப்பட்டது.

அந்த பகுதியில் மனிதப்புதைகுழி இனம்காணப்பட்டதால் வளைவை அமைக்க பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை. அனுமதி வழங்கப்பட்டு ஓராண்டுக்குள் செயற்படுத்தப்படா விட்டால், மீண்டும் அனுமதி கோர வேண்டும். இதற்கமைய, மீண்டும் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொண்டனர்.

இது தொடர்பாக சபையில் இரு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது. இடத்தை பார்வையிட்டு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில், ஏப்ரல் 23ம் திகதி சபை உறுப்பினர்கள் சிலரும், நானும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டோம்.

அந்த வீதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமானது. அங்கு எந்த இடத்தில் வளைவு அமைக்கவும் ஆட்சேபணையில்லையென அவர்கள் தெரிவித்தனர். இதன்பின்னர் வளைவு அமைக்க அனுமதி வழங்கினேன்.

அனுமதி வழங்கப்பட்ட பின்னர், மன்னார் ஆயர் இல்ல்லத்தின் சார்பில் சிலர் என்னை சந்தித்தனர். ஆயர் இல்லத்திற்கு என்னையும், எமது சில உறுப்பினர்களையும் அழைத்திருந்தனர்.

எமது சகோதரத்துவத்திற்கு பிரச்சனை ஏற்படாது பாதுகாக்க வேண்டும். நாங்கள் இரு பகுதியும் பேசித் தீர்க்கும் வரை வழங்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மன்னார் ஆயர் என்னிடம் கேட்டுக்கொண்டார்.

ஆயர் இந்த பிரச்சனையை சுமகமாக தீர்க்க முயற்சிப்பதால், அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவெடுத்தேன்.

வளைவு விவகாரத்தை ஆராயஈ அவசர கூட்டத்தை கூட்டுமாறு சபை உறுப்பினர் கொன்சன் குலாஸ் கடிதம் கையளித்திருந்தார். இது தொடர்பாக மன்னார் ஆயருடன் கலந்துரையாடியபோது, அவசர கூட்டத்திற்கு அவசியமில்லையென்றார். இருந்தாலும், 12 உறுப்பினர்களின் கையொப்பமுள்ளதால் இந்த அவசர கூட்டத்தை கூட்டினேன்“ என உண்மையை போட்டுடைத்தார்.

logoblog

Thanks for reading திருக்கேதீச்சர ஆலய வளைவு அமைப்பதை மன்னார் ஆயரே நேரடியாக தடுத்து நிறுத்தினார்: அம்பலப்படுத்தினார் தவிசாளர்!

Previous
« Prev Post