Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 26 ஜூலை, 2019

வவுனியா பேருந்து நிலையத்தில் பயணிகள் மீது பொலிசார் அடாவடி!

  admin       வெள்ளி, 26 ஜூலை, 2019


வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள சோதனை நிலையத்திலிருந்த பொலிசார் இன்று காலை வாரிக்குட்டியூர் பகுதியிலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணித்த பயணிகளை பேருந்தைவிட்டு கீழே இறங்கவிடாது பேருந்தின் இரு கதவுகளையும் மூடி பொலிஸார் பயணிகள் மீது அடாவடியில் ஈடுபட்டிருந்தனர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவ் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

புதிய பேருந்து நிலையத்தில் கடந்த மூன்று மாதங்களாக சோதனைச் சாவடி நிலையத்தினை அமைத்துள்ள பொலிசார் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் மீது சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். 

இன்று காலை வாரிக்குட்டியூர் பகுதியிலிருந்து பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பேருந்து ஒன்றினை பேருந்து நிலையத்திற்குள் சென்ற பேருந்து, சோதனைச் சாவடியில் பொலிசார் இல்லாத நிலையில் பேருந்தினை உள்ளே செலுத்தி பயணிகள் இறக்கிக்கொண்டிருந்த போது திடீரென்று பேருந்தை அண்மித்த பொலிசார் பேருந்தின் இரண்டு பிரதான கதவுகளையும் மூடியதுடன் பேருந்திலுள்ள பயணிகளை இறக்கி சோதனை மேற்கொண்டனர். 

இந்நடவடிக்கை பேருந்து நிலையச் சோதனைச் சாவடியிலுள்ள பொலிசாரின் அடாவடித்தனத்தை எடுத்துக்காட்டியுள்ளதாகவும், வேறு எந்த மாவட்டத்திலும் பேருந்து நிலையங்களில் இவ்வாறான சோதனை சாவடிகள் இல்லை எனவும் வவுனியாவில் மட்டும் ஏன் இவ்வாறான செயற்பாடுகள் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நாட்டில் அமைதி நிலவுகின்ற போதிலும் வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொலிசாரின் சோதனைச்சாவடி அகற்றப்படவில்லை அண்மையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தானும் குறித்த சோதனைச்சாவடியை உடனே அகற்றிவிடுமாறும் நாட்டில் சீரான நிலை நிலவுகின்ற நேரத்தில் இச் சோதனைச்சாவடி தேவையற்றது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Aishwarya Rai congratulates Ajith on his success


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வவுனியா பேருந்து நிலையத்தில் பயணிகள் மீது பொலிசார் அடாவடி!

Previous
« Prev Post