onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Thursday, July 4, 2019

ஐ.எஸ் கோட்டைக்குள் கொடூரமாக கொல்லப்பட்டவர்களின் பாரிய மனிதப்புதைகுழி கண்டுபிடிப்பு!

  admin       Thursday, July 4, 2019


சிரியாவின் ரக்கா நகரில் 200 உடல்கள் அடங்கிய பாரிய மனிதப்புதைகுழியை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐஎஸ் அமைப்பின் தலைநகராக விளங்கிய ரக்காவின் தென்பகுதியில் இந்த மனித புதைகுழியை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மனித புதைகுழியில் காணப்படும் நடுத்தர வயதுடையதென நம்பப்படும் ஐந்து பேரின் உடல்களில் ஒரேஞ் நிற ஆடையை காணமுடிகின்றது என தெரிவித்துள்ள லண்டனை தளமாக கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் அதிகாரியான அல் காமிஸ் தெரிவித்துள்ளனர். ஐஎஸ் அமைப்பு தனது கைதிகளை கொலை செய்வதற்கு முன்னர் இந்த நிற ஆடைகளையே அவர்களை அணியச்செய்வது வழக்கம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தலையில் சுடப்பட்டே கொல்லப்பட்டுள்ளதாக அல் காமிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கல்லால் எறிந்து கொல்லப்பட்டதாக நம்பப்படும் மூன்று பெண்களின் உடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அவர்களின் மண்டை ஓடுகள் கடுமையாக எலும்பு முறிந்து காணப்படுவதாக அந்த அதிகாரி கூறினார்.

இந்த மனிதப்புதைகுழியில் 800 பேரின் உடல்கள் வரையிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மனிதப்புதைகுழி வான்கார்ட் முகாம் பகுதியில் அமைந்துள்ள தொடர்ச்சியான புதைகுழிகளின் ஒரு பகுதியாகும், அங்கு கடந்த மாதங்களில் 3,500 க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, ”என்று பெயரிடப்படாத அதிகாரி ஒருவர் டிபிஏ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பெப்ரவரியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி , இன்றுவரை அறியப்பட்டதில் மிகப்பெரியது,இந்தப்பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் சிறுவர்களுக்கு போராட பயிற்சி அளித்ததாக நம்பப்படுகிறது.

நகரைச் சுற்றி பல புதைகுழிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் ஒன்று "பனோரமா" என்று அழைக்கப்படுகிறது, அதில் இருந்து 900 க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன..

ஐஎஸ் அமைப்பு 2014 இல் சிரியாவை கைப்பற்றி தனது தலைநகரமாக ரக்காவை மாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் 2017 இல் அமெரிக்கா சார்பு குழுக்கள் இந்த பகுதியை கைப்பற்றியிருந்தன.

logoblog

Thanks for reading ஐ.எஸ் கோட்டைக்குள் கொடூரமாக கொல்லப்பட்டவர்களின் பாரிய மனிதப்புதைகுழி கண்டுபிடிப்பு!

Previous
« Prev Post