onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Sunday, July 7, 2019

A9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்!

  admin       Sunday, July 7, 2019


மாங்குளம் பிரதேச கல்வி நடவடிக்கையயை முன்னேற்ற இடவசதி இல்லாத பாரிதாப நிலை

மாங்குளம் பகுதியையும் அதை அண்டிய கிராமங்களையும் கல்வி மூலமாகவே முன்னேற்ற முடியும் என்ற தூரநோக்கோடு எமது பிரதேச மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக பல்கலைக்கழக
மாணவர்களையும் அனுபவம் வாய்ந்த யாழ் பிரபல ஆசிரியர்களையும் ஒன்றினைத்து
இலவச கற்பித்தல் பணியை மேற்கொள்ள எண்ணினோம்.

மாங்குளம் பகுதியில் புத்திஜீவிகள் பலரால் பல கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டு அவை பெற்றோரின் பொருளாதார நிலையின் நிமிர்த்தமும் வறுமையின் பிடியாலும் இடையில் நிறுத்திக் கொள்ளப்பட்ட துர்ப்பாக்கிய நிலை எற்பட்டது யாவரும் அறிந்ததே….

எம் பிரதேச மக்கள் வறுமையின் கோர பிடியில் இருந்து இன்னும் மீண்டு வராத ஓர் சூழ்நிலையில் அவர்களின் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதன் மூலம் ஓர் வளம்மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற எண்ணத்தில் கா.பொ.த சாதாரண தரம் வரையான

#மாங்குளம்_ம_வி
#பனிக்கன்குளம்_அ_த_க
#வன்னிவிளாங்குளம்_அ_த_க
#ஒலுமடு_அ_த_க
#பெரியபுளியங்குளம்_அ_த_க
#கரிப்பட்டமுறிப்பு_அ_த_க
#புலிமச்சிநாதகுளம்அ_த_க
#அம்பகாமம்_அ_த_க

முதலிய பாடசாலை மாணவர்களை உள்வாங்கி அவர்களுக்கு முற்றுமுழுதாக இலவசமாக கற்பிப்பதற்க்கு முன்வந்துள்ளோம்
எனினும் இக் கிராம மாணவர்கள் வந்து போவதற்க்கு பொருத்தமாக மாங்குளம் சந்தியை அண்மித்த பகுதியில் வாடகைக்கு கூட ஓர் பொருத்தமான நிலப்பரப்பு கிடைக்காத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது

நாம் இலவசமாக கல்வியை வழங்க எமக்கு வாடகைக்காவது பொருத்தமான இடம் கிடைக்காத அவலத்துடன்……………
#மண்ணின்_மைந்தன்

தொடர்புகட்கு அழையுங்கள் -778573429- க.நிருபன்

logoblog

Thanks for reading A9 வீதி மாங்குளம் வாழ் மக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்!

Previous
« Prev Post