Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 25 ஜூலை, 2019

72 நிமிடங்கள் நின்ற நிலையில் முழங்கிய சம்பந்தன்: சபையில் கோரம் இருக்கவில்லை!

  admin       வியாழன், 25 ஜூலை, 2019


ஒரு நாட்டின் அரசியலமைப்பே அந்நாட்டின் அதி உன்னத சட்டமாதலாலும்,
உலகெங்கும் ஜனநாயகக் கட்டமைப்புகளில் முடிந்தவரை அதி கூடிய கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் வகுக்கப்பபடும் அரசியலமைப்பின் அடிப்படையில் நாடுகள் ஆளப்படுவதாலும், பலதரப்பட்ட, பன்மைத்துவ சமூகத்தைக்கொண்ட ஒரு பல்லின, பன்மொழி மற்றும் பல்கலாசார நாடாகிய இலங்கை முடிந்தவரை அதிகூடிய தேசிய கருத்தொருமைப்பாட்டோடு வகுக்கப்பட்ட ஓர் அரசியலமைப்பின் அடிப்படையில் ஆளப்படவில்லையாதலாலும்,
அத்துடன் இலங்கை இதுவரை பின்வரும் மூன்று (3) அரசியலமைப்புகளின் அடிப்படையில் ஆளப்பபட்டு வருவதாலும் :-

இலங்கை மக்களின் கருத்தொருமைப்பாடின்றி காலனித்துவ பிரித்தானிய அரசாங்கத்தினால் வகுக்கப்பட்ட 1947 ஆம் ஆண்டு சோல்பறி அரசியலமைப்பு

பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக் கட்சியுடனோ எவ்வித கருத்தொருமைப்பாட்டையும் எட்டாது, பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெறக்கூடியதாகவிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் – பதவியிலிருந்த அரசாங்கம் – வகுக்கப்பட்ட 1972 ஆம் ஆண்டின் 1 வது குடியரசு அரசியலமைப்பு

பிரதான எதிர்க் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனோ அல்லது வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர் விடுதலைக் விடுதலைக் கூட்டணிக் கட்சியுடனோ எவ்வித கருத்தொருமைப்பாட்டையும் எட்டாது, பாராளுமன்றத்தில் 2ஃ3 பெரும்பான்மையைப் பெறக்கூடியதாகவிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் வகுக்கப்பட்ட 1978 ஆம் ஆண்டின் 2 வது குடியரசு அரசியலமைப்பு

வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் தமக்கென தனியானதொரு மரபுரிமையையும் நாகரிகத்தையும் அத்துடன் ஒரு வேறுபட்ட மொழி மற்றும் கலாசாரத் தனித்துவத்தையும் கொண்ட, வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வரலாற்றுக் காலந்தொட்டு பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் ஒரு மக்கள் குழுவாதலாலும்,
இலங்கையின் பலதரப்பட்ட, பன்மைத்துவ மக்களின் முடிந்தவரை அதிகூடிய கருத்தொருமைப்பாட்டைக் கொண்டிராத அரசியலமைப்புகளின்கீழ் 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கை இவ்வாறு ஆளப்பட்டு வருவதாலும்,
25 – 30 ஆண்டுகள் நீடித்த ஓர் ஆயுதப் போராட்டம் அடங்கலாக 1947 இல் சுதந்திரமடைந்ததிலிருந்து நிலவி வந்துள்ள முரண்பாட்டுச் சூழ்நிலைக்கு பலதரப்பட்ட, பன்மைத்துவ சமூகமொன்றின் தேவைகளுக்குப் பொருந்தும் அத்தகைய இயன்றவரை அதிகூடிய தேசிய கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் அமைந்த அரசியலமைப்பொன்று இல்லாமையே காரணமாதலாலும்,
பலதரப்பட்ட, பன்மைத்துவ சமூகத்தைக் கொண்ட இலங்கை கடந்த 70 ஆண்டுகளில் ஓர் ஐக்கிய, பிரிபடாத இலங்கையில் ஓர் இலங்கைத் தேசியம் என்ற வகையில் இலங்கையர் என்ற தனித்துவத்தை ஏற்படுத்தத் தவறியுள்ளதாலும்,
1978 ஆண்டு இயற்றப்பட்டு இன்றுவரை அமுலில் இருக்கும் 2 வது குடியரசு அரசியலமைப்பு சட்டமாக்கப்பட்டதிலிருந்து சொல்லப்பட்ட 1978 ஆம் ஆண்டின் 2 வது குடியரசு அரசியலமைப்பை நீக்குவதற்கும் புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றுவதற்குமான பலமானதும் தொடர்ச்சியானதுமான கோரிக்கையொன்று இருந்து வருவதாலும்,

1978 ஆம் ஆண்டின் 2 வது குடியரசு அரசியலமைப்பை நீக்குவதற்கும் புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றுவதற்கும் பல தேர்தல்களின்போது பல அரசியல் கட்சிகளினாலும் அரசியல் தலைவர்களினாலும் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் மதிக்கப்படாததோடு, 1978 ஆம் ஆண்டின் 2 வது குடியரசு அரசியலமைப்பை நீக்குவதற்கும் புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றுவதற்கும் சொல்லப்பட்ட தேர்தல்களில் மக்களினால் வழங்கப்பட்ட ஆணைகள் மதிக்கப்படாது மீறப்பட்டுள்ளமையாலும்,

அதன் விளைவாக, பல ஜனநாயகத் தீர்ப்புகளின் மூலம் மக்களினால் நிராகரிக்கப்பட்ட 1978 ஆம் ஆண்டின் 2 வது அரசியலமைப்பு மக்களின் விருப்பை மீறியும் அவர்களின் சம்மதமின்றியும் இன்றுவரை நாட்டின் அதி உன்னத சட்டமாக அமுலில் இருந்து வருவதாலும்,

2015 இல் நடைபெற்ற தேர்தலின்போது புதிய அரசியலமைப்பொன்றை ஆக்குவதற்கான மக்களாணையொன்று வெற்றிபெற்ற அபேட்சகரினால் கோரப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்டதாலும்,

2015இல் சொல்லப்பட்ட தேர்தலின்போது பிரதான எதிர்க் கட்சி அபேட்சகரும் புதியதோர் அரசியலமைப்பை ஆக்குவதற்கான மக்களாணையைக் கோரியமையாலும்,

தேர்தல் தொகுதிகளுள் 90% இற்கு மேற்பட்டவை ஒரு புதிய அரசியலமைப்பின் உருவாக்கத்திற்கு வாக்களித்தமையாலும்,

2015 இல் நடைபெற்ற சொல்லப்பட்ட தேர்தலில் கிடைக்கப்பெற்ற மக்களாணையின் அடிப்படையில், 2015 மார்ச் 09 ஆம் திகதி இன்னும் பிறவற்றோடு பின்வருமாறு கூறும் தீர்மானமொன்று பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாலும்,

(அ) இலங்கைக்கு புதியதோர் அரசியலமைப்பை உருவாக்குவது அவசியமானதென்று இலங்கை மக்கள் மத்தியில் பரவலான இணக்கப்பாடு நிலவுவதாலும்,

(ஆ) 2015 ஜனவரி 08 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சட்ட ஆட்சிக்கு மதிப்பளிப்பதும் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதுமான ஓர் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு மக்கள் தெளிவானதொரு ஆணையை வழங்கியுள்ளதாலும்,

(இ) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி மேதகு மைத்திரிபால சிறிசேன, ஏனையவற்றோடு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றுவதன் மூலம் மேலே சொல்லப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தப்பட்ட மக்களது விருப்பத்திற்கு செயலுருவம் தருவதற்கான தனது விருப்பத்தைத் தெளிவாக வெளிப்படுத்தியிருப்பதாலும்,

(ஈ) ஏனையவற்றோடு, நிறைவேற்று அதிரகாரம் கொண்ட சனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதும், விருப்பு வாக்கு முறையை இல்லாதொழிக்கும் ஒரு நியாயமான பிரதிநிதித்துவ தேர்தல் முறையை உறுதிப்படுத்துவதும், அனைத்துப் பிரசைகளினதும் ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்துவதும், தேசியப் பிரச்சினைக்கு ஓர் அரசியலமைப்பு ரீதியான தீர்வினை வழங்குவதும், தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதும், சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கும் ஓர் அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதும், மனித கௌரவத்தை உறுதிப்படுத்தும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் உத்தரவாதமளிப்பதும், பொறுப்பு வாய்ந்ததும் பொறுப்புக்கூறத்தக்கதுமான அரசாங்கத்தை ஊக்குவிப்பதுமான ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவது அவசியமாகி உள்ளதாலும்.

2015 மார்ச் 09 ஆம் திகதிய சொல்லப்பட்ட தீர்மானத்திற்கமைய, முழுப் பாராளுமன்றத்தையும் உள்ளடக்கிய ஒரு குழு ஓர் அரசியலமைப்புப் பேரவையாக உருவாக்கப்பட்டு, ஒரு புதிய அரசியலமைப்பை வகுப்பதில் பங்கேற்பதற்காக வழிநடத்தல் குழுவொன்றும் உப குழுக்களும் நியமிக்கப்பட்டதோடு, அக்குழுக்கள் பொதுமக்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் கலந்தாராய்வுகளின் பின்னர் அரசியலமைப்புப் பேரவைக்கு அறிக்கைகளைச் சமர்ப்பித்ததோடு, அவ்வறிக்ககைகள் அரசியலமைப்புப் பேரவையில் விவாதிக்கப்பட்டுள்ளதாலும்,
இனந்தெரியாத சில காரணங்களினால் கடந்த பல மாதங்களாக ; அரசியலமைப்பை உருவாக்கும் நடைமுறை முன்நகர்விற்கான சமிக்ஞைகளேதுமின்றி தேக்கமுற்றிருப்பதாலும்,

1978 இல் நிறைவேற்றப்பட்ட தற்போதைய அரசியலமைப்பு தொடர்ந்து அமுலில் இருப்பதும், புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றத் தவறியமையும் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக 2015 இல் நடந்த ஜனநாயகத் தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட மாபெரும் ஆணையை தான்தோன்றித்தனமாக நிராகரிப்பதற்கு ஒப்பானதாகவும் புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்காக 2016 இல் பாராளுமன்றத்தினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்வதற்கு ஒப்பானதாகவும், மக்களின் விருப்பமும் சம்மதமும் இன்றி அவர்கள்மீது 1978 ஆம் ஆண்டின் 2 வது குடியரசு அரசியலமைப்பபை நியாயமற்ற முறையில் தொடர்ந்து திணிப்பதற்கு ஒப்பானதாகவும் அமைவதாலும்,

அத்தகைய நிகழ்வுகள் முழு நாட்டினதும் அதன் மக்களதும் எதிர்கால நலன்களுக்கு பெருமளவில் கேடு விளைவிப்பனவாக இருக்குமாதலாலும்,

எனவே, இவ்விடயத்தை பாராளுமன்றத்தில் விவாதித்து, அரசியலமைப்பை உருவாக்கும் நடைமுறையை முன்னோக்கிக் கொண்டு சென்று அதன்மூலம் கணிசமானளவு தேசிய கருத்தொருமைப்பாட்டுடன் அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பது அவசியமாகியிருப்பதாலும்,

கணிசமானளவு தேசிய கருத்தொருமைப்பாட்டுடன் ஒரு புதிய அரசியலமைப்பு வகுக்கப்படாவிடில், அதன் விளைவாக, மக்களினாலும் ஏகமனதாக தற்போதைய பாராளுமன்றத்தினாலும் நிராகரிக்கப்பட்ட ஓர் அரசியலமைப்பின் கீழ் நாடு ஆளப்படுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுமாயின், இலங்கை வெகு காலம் செல்லுமுன்னர் ஒரு தோல்வியுற்ற அரசென்று தன்னைத் தானே தகைமைப் படுத்திக் கொள்ளுமென்பதோடு, அத்தகைய பேராபத்தொன்றைத் தவிர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது இப்பாராளுமன்றத்தின் கடமையாகும் என்று நான் கருத்துரைக்கின்றேன் என்றார்.

இன்று இரா.சம்பந்தன் 72 நிமிடங்கள் நின்ற நிலையில் உரையாற்றினார்.

இரா.சம்பந்தன் பேசியபோது, நாடாளுமன்றத்தை நடத்தி செல்ல போதிய உறுப்பினர்கள் இருக்கவில்லை. ஆளும் தரப்பில் எந்த அமைச்சரும், பிரமுகரும் சபையில் இருக்கவில்லை. எதிரணியிலும் முக்கிய பிரமுகர்கள் இருக்கவில்லை. இதன்போது எதிரணியினர் கோரத்தை கோரினர்.

கோரம் மணி ஒலித்ததும், சபை உறுப்பினர்கள் கூடினர். மீண்டும் சபை ஆரம்பித்து, இரா.சம்பந்தன் உரையாற்ற, எம்.பிக்கள் வெளியில் சென்று விட்டனர்.

இனப்பிரச்சனை தீர்வு குறித்து பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சமர்ப்பித்து உரையாற்றியபோது, ஆளும் தரப்பினரும் சபையில் இருக்காதது, இனப்பிரச்சனை தீர்வு விவகாரத்தில் அவர்களது மனநிலையை பிரதிபலிக்கிறதாக கூட்டமைப்பு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! 72 நிமிடங்கள் நின்ற நிலையில் முழங்கிய சம்பந்தன்: சபையில் கோரம் இருக்கவில்லை!

Previous
« Prev Post