Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 26 ஜூலை, 2019

5ஜி கம்பத்தால் யாழிலிருந்து குடும்பமொன்று இடம்பெயர்ந்தது!

  admin       வெள்ளி, 26 ஜூலை, 2019


யாழ் மாநரசபையில் முறைப்படியான அனுமதி பெறப்படாமல், முதல்வரினால் அனுமதிக்கப்பட்ட ஸ்மார்ட் போல் திட்டத்தால் யாழ் நகரிலிருந்து குடும்பமொன்று இடம்பெயர்ந்துள்ளது.

யாழ் இந்து ஆரம்பப்பாடசாலைக்கு அருகில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் போல் கம்பம், சாதாரண மழைக்கே சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, கம்பத்திற்கு அருகிலுள்ள வீட்டிலிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

கம்பம் சரிவது தொடர்பில் யாழ் மாநகரசபைக்கு அறிவித்தும் அவர்கள் பாராமுகமாக இருந்ததாகவும், வேறு வழியின்றி உயிரை பாதுகாத்துக் கொள்ள பெறுமதியான பொருட்களுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

5ஜி திட்டத்திற்காக இந்த கம்பம் நடப்படுவதாக தெரிவித்து, இந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! 5ஜி கம்பத்தால் யாழிலிருந்து குடும்பமொன்று இடம்பெயர்ந்தது!

Previous
« Prev Post