onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Friday, July 5, 2019

காத்தான்குடியில் 20 பேருக்கு ஷரிஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை- அபேதிஸ்ஸ தேரர் தகவல்

  admin       Friday, July 5, 2019


காத்தான்குடி பிரதேசத்தில் ஷரிஆ சட்டத்தின் பிரகாரம் 20 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக காத்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்துக்கு இரகசிய தகவல் வழங்கியமை, விபச்சாரம் செய்த பெண்கள் , சூதாட்டத்தில் ஈடுபட்டமை, பொலிஸாருக்கு நிதி வழங்கியமை ஆகிய காரணங்களுக்காக அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த முஸ்லிம் நபர் தகவல் வழங்கியுள்ளதாகவும் தேரர் கூறியுள்ளார்.

வஹாப் அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்போம் என்ற பெயரில் நேற்று நுகேகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கான அனைத்து ஆதாரங்களும் தகவல்களும் தன்னிடம் உள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றத்தடுப்புப் பிரிவு என்பவற்றுக்கு அதனை வழங்க தயாராகவுள்ளதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

logoblog

Thanks for reading காத்தான்குடியில் 20 பேருக்கு ஷரிஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை- அபேதிஸ்ஸ தேரர் தகவல்

Previous
« Prev Post