onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Saturday, July 13, 2019

13 வயது மாணவனுடன் பாலியல் உறவு வைத்த ஆசிரியைக்கு நீதிமன்றம் கொடுத்த கடும் தண்டனை!

  admin       Saturday, July 13, 2019


அரிசோனா பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பணியாற்றிய பிரிட்டனி ஸமோரா (8) என்பவரே தண்டனைக்குள்ளாகியுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை நடந்த விசாரணையின்போது, ‘நான் ஒரு நல்ல மற்றும் உண்மையான நபர். தவறு செய்துவிட்டேன். அதற்காக  ஆழ்ந்த வருத்தப்படுகிறேன்’ என்று ஸமோரா கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களிடமும் அவரது குடும்பத்தினரிடமும் மன்னிப்புக் கேட்டார். சிறையில் ஒரு புதிய பட்டம் பெறத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு ஏற்ப, நன்நடத்தை அடிப்படையில் விடுதலையாக முடியாது. தனது 48 அல்லது 49 வயதிலேயே ஸமோரா விடுதலையாக முடியும்.

அவர் விடுவிக்கப்பட்ட பிறகு, அவர் ஒரு பாலியல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுவார். இரண்டு தகுதிகாண் கட்டத்தை அவர் கடக்க வேண்டும்.

லொஸ் பிரிசாஸ் அகடமியில் ஆறாம் வகுப்பு கற்பித்த ஸமோரா, 2018 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

ஒரு வகுப்பறையில் 13 வயது மாணவனுடன் பலமுறை உடலுறவு கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஒரு சந்தர்ப்பத்தில், மற்றொரு மாணவருக்கு முன்னால் பாலியல் நடத்தையில் ஈடுபட்டிருந்தார்

தமது மகனின் நடத்தையில் சந்தேகமடைந்த பெற்றோர், மாணவனின் கையடக்க தொலைபேசியில் கண்காணிப்பு செயலியொன்றை இரகசியமாக நிறுவியிருந்தனர். இது ‘சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கம் அல்லது நடத்தை’க்கான செய்தி பயன்பாடுகளை கண்காணிக்கிறது.

மாணவனின் தொலைபேசியில் சந்தேகத்திற்கிடமான படங்கள் மற்றும் செய்திகளைக் கண்டறியும்போது அந்த செயலி, பெற்றோருக்கு எச்சரிக்கைகளை அனுப்புகிறது. அப்படி கிடைத்த எச்சரிக்கையையடுத்து, மாணவனை பெற்றோர் விசாரித்தபோது ஸமோராவுடன் பாலியல் தொடர்பை கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டான்.

பின்னர், பொலிஸ் முறைப்பாட்டையடுத்து ஸமோரா கைதானார்.

மாணவனின் பெற்றோர் தற்போது விவாகரத்தாகியுள்ளனர். அவர்கள் நீதிமன்றில் முன்னிலையாகி, ஸமோராவிற்கு அதிகபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தினர்.


logoblog

Thanks for reading 13 வயது மாணவனுடன் பாலியல் உறவு வைத்த ஆசிரியைக்கு நீதிமன்றம் கொடுத்த கடும் தண்டனை!

Previous
« Prev Post