Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 11 ஜூலை, 2019

என் பெயர் மனோ கணேசன்! இந்த நொடியில் என் மனதில்… (12/07/19)

  admin       வியாழன், 11 ஜூலை, 2019என் பெயர் மனோ கணேசன். நான் கடந்து வந்த பாதையில் ஏதாவது ஒரேயொரு விஷயமாவது, இந்நாட்டில் வாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படும் தமிழ், முஸ்லிம் இளையோருக்கு முன்மாதிரியாக அமைந்தால் மகிழ்ச்சியடைவேன்.

வத்தளையில்  தேசிய தமிழ் பாடசாலை அமைகின்ற இன்றைய நல்ல நாளை அடுத்த நல்ல செய்தியாக,  நான் அமைச்சரவை பத்திரம் மூலம் மத்துகமையில் பெற்றுக்கொண்டுள்ள ஐந்து ஏக்கர் காணியில் களுத்துறை தமிழ் பாடசாலைக்காக விரைவில் அடிக்கல் நாட்டுவேன். 

அதேபோல் அவிசாவளையிலும் அமைச்சரவை பத்திரம் மூலம் நான் பெற்றுக்கொண்டுள்ள ஐந்து ஏக்கர் காணியில் நவீன கிராமம் ஒன்றை அமைக்க அடிக்கல் நாட்டுவேன். 

எனது கொழும்பு மாவட்டத்தின், பாடசாலைகளுக்கு மாத்திரம் சுமார் முன்னூறு மில்லியன் ரூபா நிதியும், உட்கட்டமைப்பு மற்றும் ஆலய அபிவிருத்திக்காக இதேயளவு இன்னொரு தொகையும்  ஒதுக்கியுள்ளேன். 

அப்புறம் கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கம்பஹா, மாத்தளை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் உட்கட்டமைப்பு, பாடசாலை, ஆலய அபிவிருத்தி பணிகளுக்காக மில்லியன் கணக்கில் பெருந்தொகையில் நிதி ஒதுக்கியுள்ளேன். விரைவில் நிதி கணக்கை அறிவிக்கிறேன். ஆச்சரியப்படுவீர்கள். 

இது மட்டுமல்ல, விரைவில் 1,300  இரண்டாம், மூன்றாம் மொழி பயிற்சியாளர் தொழில் நியமனங்களை எனது அமைச்சின் மூலம் நான் வழங்குவேன். 

உண்மையில் 2015ம் வருடம், நான் இந்த அமைச்சை பொறுப்பேற்ற போது அதில், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க மட்டுமே நிதி இருந்தது. வேறு ஒரு வளமும் இருக்கவில்லை. 

இன்றைய எமது அரசில் இருக்கும் அனைத்து சிறுபான்மை அமைச்சர்களும் அன்று மகிந்தவுடன் இருந்தார்கள். நான் மட்டுமே, எதிரணியில் ரணிலுடன் நின்று, நெருக்கடி மிக்க வேளையில், உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடி, மகிந்த அரசை மாற்ற பெரும் பங்களிப்பு வழங்கினேன். 

அதனால் மிக சிறந்த ஒரு வளமான அமைச்சை ரணில் எனக்கு தருவார் என பலர் எதிர்பார்த்தார்கள். ஆனால், ரணில் தரவில்லை. 

எல்லோரும் என்னை பார்த்து சிரித்தார்கள். என் கூட இருந்தோர் கூட உள்ளுக்குள் சிரித்தார்கள். நான் மனம் கலங்கவில்லை. ரணிலை விட்டு ஓடவும் இல்லை. 

முதலில், என் அமைச்சின் எனது அலுவலகத்தில் எனக்கு மிகவும் நம்பிக்கையுள்ள செயலாற்றல் கொண்டோர் குழுவை அமைத்துக்கொண்டேன். அப்புறம், அமைதியாக அரசாங்கத்துக்கு உள்ளேயே கடுமையாக ஆளுமையுடன் போராடினேன்.  

இன்று “வானம் மட்டுமே எல்லை” என எதையும் செய்யக்கூடிய மிக சிறந்த ஒரு அமைச்சாக எனது அமைச்சை நான் மாற்றியுள்ளேன். 

எதிர்கால தேர்தலில் நான் பாராளுமன்றம் செல்லாவிட்டால், அமைச்சரவையில் அமராவிட்டால், வரும் புது அரசாங்கத்தில் இந்த அமைச்சை பெருகின்றவர் அதிஷ்டசாலியாக இருக்க நான் இன்று வழியேற்படுத்தியுள்ளேன்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! என் பெயர் மனோ கணேசன்! இந்த நொடியில் என் மனதில்… (12/07/19)

Previous
« Prev Post