நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, June 8, 2019

முஸ்லிம் பாடசாலைகள் குறித்து முக்கிய செய்தி வெளியீடு

Saturday, June 08, 2019
Tags


நாட்டிலுள்ள அரச முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களின் பின் கடந்த மே மாதம் 13 ஆம் திகதி நாட்டிலுள்ள ஏனைய அரச பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

எனினும் நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு, நடைபெறாது விடுபட்ட பாடசாலை நாட்களை ஈடு செய்வதற்கான தீர்மானங்கள் எதுவும் இதுவரை கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட வில்லை.

சிங்கள மற்றும் தமிழ் அரச பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் மாத விடுமுறைக் காலத்தில் அதனை ஈடு செய்வதற்கான யோசனைகள் பல தரப்பிலும் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் விடுமுறை வழங்கப்படுவதில்லை என்பதனால் மாற்று வழி முறையொன்று குறித்து யோசிக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.