நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, June 9, 2019

அந்த வெளிநாட்டு சக்தி அமெரிக்காவா? விமல் கூறுவது சரியே - ஹக்கீம்

Sunday, June 09, 2019
Tagsசஹ்ரான் போன்றவர்கள் தானாக உருவாகவில்லை எனவும் வெளிநாட்டு சக்திகளால் கொடுக்கப்பட்ட வேலையை அவர் நிறைவேற்றியதாகவும் முன்னாள் அமைச்சர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். 

மேலும், குறித்த வெளிநாட்டு சக்தி அமெரிக்கா என விமல் வீரவன்ச கூறுவது சரி, அவர் சரியான இடத்தில் ஆணி அடித்துள்ளார்.

அவர் போல எனக்கு பேச முடியாது. அவை மிக பயங்கரமான விடயம். 

அவற்றை பேச போய் எமக்கு சிக்கலில் மாட்ட முடியாது. எமது மக்களை இதை விட பயங்கர சிக்கலில் தள்ளி விட முடியது என கூறினார்.