நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, June 13, 2019

அவசரமாக சவுதி விரையும் ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு! கைதாகவுள்ள பயங்கரவாத அமைப்பின் முக்கிய பிரிவின் தலைவர்!

Thursday, June 13, 2019
Tags


தேசிய தௌஹீத் ஜமாத்தின் ஆயுதப்பிரிவு தலைவர் மொஹமட் மிலான் என்ற அபு செய்லானை அழைத்துவருவதற்காக ஸ்ரீலங்காவிலிருந்து CID குழு ஒன்று சவுதி சென்றுள்ளதாக பொலிஸ்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்காவில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதியான உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சஹ்ரானின் தலைமையில் ஐ.எஸ் அமைப்பின் ஆதரவுடன் நடைபெற்றது என கூறப்பட்டாலும், அந்த தாக்குதலை வழிநடத்தியவர் அபு செய்லான் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மொஹமட் மிலான் எனும் அபு செய்லா, வவுணத்தீவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் உள்ளவர் என்பதோடு, வண்ணாத்திவில்லுவில் சஹ்ரானின் பயிற்சி முகாமை காட்டிக் கொடுத்த அமைச்சர் கபீர் ஹசீமின் இணைப்பாளர் மொஹமட் நஸ்லின் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தியவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தொடர் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற சமயம் அவர் மக்கா சென்றிருந்தார் எனவும் தெரியவந்தது. அத்துடன் அபு செய்லான் ஏப்ரல் மாதம் 30ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தார் எனவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்காவில் தாக்குதல்கள் நடந்த சமயம் அவர் மக்கா சென்றுள்ளார் என்பது தொடர்பில் சவுதி மற்றும் சர்வதேச பொலிசாருக்கு ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவால் எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், சவுதியிலிருந்து அவர் ஸ்ரீலங்கா வரவிருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.

ஸ்ரீலங்கா வருவதற்காக அவர் சவுதி விமான நிலையத்திற்கு வந்தபோதும், ஸ்ரீலங்கா செல்வதற்கான விமானத்தில் ஏறவில்லை என தகவல் வெளியாகியிருந்தது. பின்னர் அவர் சவுதி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அவ்வாறு கைது செய்யப்பட்ட அன்று மாலையே அவர் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவார் என்று சவுதி அரேபிய அதிகாரிகள் அறிவித்திருந்த போதும், அவர் நாடுகடத்தப்படவில்லை. பின்னர் ஸ்ரீலங்காவிலிருந்து விசேட குழு ஒன்று அவரை அழைத்துவர முயற்சித்த போதும், முடியாமல் போயுள்ளது.

பின்னர் நடத்தப்பட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை அடுத்து கடந்த 11ம் திகதி ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அவரை இலங்கைக்கு அனுப்ப சவுதி அரசாங்கம் சம்மதித்துள்ளது. இதன் பின்னரே அவரை அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவின் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.