நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, June 8, 2019

குண்டு வெடித்ததில் நான்கு ராணுவ அதிகாரிகள் பலி!

Saturday, June 08, 2019
Tags


பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள வடக்கு வசிரிஸ்தான் மலைப்பகுதி பயங்கரவாதிகள் ஆதிக்கத்தில் உள்ளது. இதனால் இங்கு அதிக அளவில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அப்பகுதியில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் ரோந்து சுற்றி வந்தனர். கர்காமர் பகுதியில் வந்த போது வீதியோரம் இருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

இதில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் தூள் தூளாக நொருங்கியது.

இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து சென்ற ராணுவ வாகனங்கள் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

குண்டு வெடித்ததில் வாகனத்தில் இருந்த 3 ராணுவ அதிகாரிகள் மற்றும் ஒரு வீரர் உள்பட 4 பேர் உடல் சிதறி பலியாகினர். 4 வீரர்கள் காயம் அடைந்தனர்.

இச்சம்பவத்தில் லெப்டினென்ட் கர்னல் ரஷீத் கரீம் பைக், மேஜர் மோயீஷ், மசூத் பைக், கேப்டன் ஆரிப் துல்லா மற்றும் ஹவில் தார் ‌ஷகீர் ஆகிய 4 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வீதியோரத்தில் புதைக்கப்பட்ட குண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என ராணுவம் உறுதியாக நம்புகிறது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. கடந்த ஒரு மாதமாக இங்கு பயங்கரவாதிகள் அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 35 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.