நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, June 14, 2019

நீராவியடி பிள்ளையாருக்கு அருகிலிருந்த புத்த விகாரை பெயர்ப்பலகை அகற்றப்பட்டது!

Friday, June 14, 2019
Tags


நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் கடந்த 10 வருடங்களின் முன்னர், விகாரையொன்று அமைக்கப்பட்டு அதற்கு குருகந்த ரஜமகா விகாரையென்ற பெயர் சூட்டப்பட்டது. அப்போது புத்தசாசன அமைச்சிலும் அது பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் அனுமதி பெறப்படாமல் விகாரையின் பெயர்ப்பலகை நாட்டப்பட்டது. விகாரை சர்ச்சை நீடித்து வரும் நிலையில், அதை கவனிக்காமல் வீதி அபிவிருத்தி அதிகாரசபை எப்படி அனுமதியளித்தது என்ற உள்ளக சர்ச்சை தோன்றியதையடுத்து, பெயர்ப்பலகையை அகற்றும் முடிவை வீதி அபிவிருத்தி அதிகாரசபை எடுத்ததாக தமிழ்பக்கம் அறிந்தது.