நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, June 10, 2019

யாழ் இளைஞனை அடித்தே கொன்ற ரௌடிகள்: சுன்னாகத்தில் பதற்றம்!

Monday, June 10, 2019
Tagsயாழ்ப்பாணத்தில் கும்பலொன்றின் தாக்குதலில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று உயிரிழந்துள்ளார்.

உடுவில் அம்பலவாணர் வீதி, நாகம்மாள் லேனைச் சேர்ந்த நடேசு ரதீஸ்குமார் (25) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

இந்த மரணத்தையடுத்து, உடுவில் பகுதியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தாக்குதலை நடத்திய ரௌடிகளை கைது செய்ய வேண்டுமென ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், உயிரிழந்தவர் உடுவிலிருந்து சுன்னாகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். அவரை கே.கே.எஸ் வீதி, ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையில் மூவர் கொண்ட கும்பல் இடைமறித்து, அவர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது.
 
அவரது தலையில் கொட்டானாலும் ரௌடிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் மயக்கமடைந்து, நிலத்தில் வீழ்ந்தார். உடனடியாக அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். ஒரு வாரமாக தீவிர சகிச்சையளிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி இன்று திங்கட்கிழமை மதியம் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவானின் விசாரணைகளை அடுத்து சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்த உத்தரவிடப்பட்டது.

இதனால் உடுவில் பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சுன்னாகம் கல்லாகட்டுவனைச் சேர்ந்தவர்களே தாக்குதல் நடத்தினர், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென உயிரிழந்த இளைஞனின் உறவினர்களும், ஊர் மக்களும் கொந்தளித்தனர். இதையடுத்து, மரணவீடு மற்றும் அந்த பகுதிகளில் மக்கள் ஒன்று கூடுவதை பொலிசார் தடுத்து வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த இளைஞனின் வீடு, மற்றும் தாக்குதல் நடந்த இடத்திலுள்ள எரிபொருள் நிலைய பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மது அருந்துவதில் ஏற்பட்ட முரண்பாடே இந்த கொலையில் முடிந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.