Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Sunday, June 30, 2019

அவரின் பெயரைக் கேட்டதும் தலை தெறிக்க ஓடப்போகும் கோட்டா மற்றும் மஹிந்த - தமிழ் எம்.பி

  admin       Sunday, June 30, 2019


நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றக்கூடிய ஒருவரையே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம்.

அவரின் பெயரை அறிவித்ததும் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்களுக்கு ஓடவேண்டிய நிலையே ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

கம்பளை மாவில தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த சட்டமே 18 ஆவது திருத்தச்சட்டமாகும். மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே அச்சட்டம் கொண்டுவரப்பட்டது. 

அந்த சட்டம் நீடித்திருந்தால் நாட்டுக்கு பேரழிவு ஏற்பட்டிருக்கும்.

எனினும், 19 ஆவது திருத்தச்சட்டத்தின்மூலம் நாம் ஜனநாயகத்தை நிலைநாட்டினோம். அரச பொறிமுறை மற்றும் நிர்வாகத்தில் சுயாதீனத்தன்மை நீடிக்கின்றது.

ஒக்டோபர் மாதம் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. ஆனால், 19 ஆவது திருத்தச்சட்டத்தை பயன்படுத்தி அதை நாம் முறியடித்தோம்.

எனவே, 19 ஆவது திருத்தச்சட்டத்தின்மூலம் ஆட்சியைக்கவிழக்க முடியாமல் போய்விட்டதே என்ற கவலையில்தான் ஜனாதிபதி இப்படி 19 இற்கு எதிராக திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! அவரின் பெயரைக் கேட்டதும் தலை தெறிக்க ஓடப்போகும் கோட்டா மற்றும் மஹிந்த - தமிழ் எம்.பி

Previous
« Prev Post