onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Wednesday, June 12, 2019

மைத்திரியின் கோபத்தை மேலும் மேலும் தூண்டும் தெரிவுக்குழு! தென்னிலங்கை அரசியலில் வலுக்கிறது நெருக்கடி!

  admin       Wednesday, June 12, 2019


கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் ஆகியோரை நாளைய தினம் சாட்சியமளிக்க அழைப்பதென உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ரத்துச் செய்ய ஜனாதிபதி வலியுறுத்தி வரும் நிலையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினராவார். ஆகவே தான் 

நியமித்த குழுவின் உறுப்பினர் ஒருவரை தெரிவுக்குழு விசாரணைகளுக்கு அழைத்திருப்பது ஜனாதிபதிக்கு மேலும் விசனத்தை ஏற்படுத்தக் கூடுமென அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தெரிவுக்குழு அறிக்கையினை நேற்று ஜனாதிபதியிடம் கையளித்துள்ள நிலையில் எந்த அடிப்படையில் எப்படியான விசாரணைகளை மேற்கொண்டது என்பதை கேட்பதற்காகவே இலங்ககோன் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் அழைக்கப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் சாட்சியம் வழங்கிய காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனங்கள் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி அப்துல் உவைஸ், ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் பல்வேறு தகவல்களை தெரிவித்ததையடுத்தே அது குறித்த விளக்கங்களை கேட்டு அறிந்து கொள்வதற்காக ஹிஸ்புல்லாஹ் நாளைய தினம் தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மைத்திரியின் கோபத்தை மேலும் மேலும் தூண்டும் தெரிவுக்குழு! தென்னிலங்கை அரசியலில் வலுக்கிறது நெருக்கடி!

Previous
« Prev Post