நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, June 13, 2019

அக்குறணையின் குப்பைகள் தம்புள்ளைக்கு – ஒப்பந்தம் கைச்சாத்து

Thursday, June 13, 2019
Tags


அக்குறணை பிரதேச சபையினால் சேகரிக்கப்படும் திண்ம கழிவுப் பொருட்களை தம்புள்ள மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் திண்ம கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்திற்கு வழங்குவது தொடர்பில் தம்புள்ள மாநகர சபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதாக அக்குறணை பிரதேச சபை தவிசாளர் ஐ.எம்.இஸ்திஹார் தெரிவித்தார்.

அக்குறணை பிரதேச சபையின் மாதாந்த பொதுச் சபை கூட்டம் நேற்று (13) அளவதுகொடை நகரில்
அமைந்துள்ள அக்குறணை பிரதேச சபையின் பிரதான கட்டிடத்தொகுதியில் நடைபெற்றபோதே தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அக்குறணை பிரதேச சபை பிரிவில் அன்றாடம் சேகரிக்கப்படும் ஒரு தொகை திண்ம கழிவுப்பொருட்களை தம்புள்ள மாநகர சபையிடம் வழங்குவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது

அக்குறணை பிரதேச சபைக்கு சொந்தமான தின்ம கழிவு அகற்றும் யாலுகஹவெல கழிவு அகற்றும் நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதால் பிரதேச சபை பிரிவில் அன்றாடம் சேரும் திண்ம கழிவு பொருட்களை முழுமையாக அந்த இடத்தில் போடுவதில் முகம்கொடுத்துவரும் சிறமத்திற்கு தீர்வொன்றாக அமையுமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்

தற்போது பிரதேச சபையினால் திண்ம கழிவு அகற்றும் சேவை குறிப்பிட்ட ஒரு எல்லை பிரதேசத்திற்கு மாத்திரமே வழங்கப்பட்டு வருவதுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னர்
இனிமேல் இச்சேவையை வழங்கப்படும் எல்லை பரப்பை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், பிரதேசத்தின் அழகையும் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் பிரதேச மக்களுக்கு பிரதேச சபையினால் வழங்கப்படவேண்டிய சேவைகளை விஸ்தரித்து இன மத கட்சி பேதமின்றி அனைவருக்கும் முழுமையான சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

அக்குறணை பிரதேசத்துக்குள் திண்மக்கழிவுகளை அகற்றுவதில் மக்களால் எதிர்னோக்கப்பட்ட சிரமங்கள் இனிமேலும் தோன்றாது என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் அவர் குறிப்பிட்டார்

பிரதேசத்தின் திண்ம கழிவுகள் அகற்றுவதில் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களுக்கும் பிரதேச சபை அதிகாரிகளும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வேண்டிக்கொள்ள விரும்புகிறேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.