நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, June 13, 2019

மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்: ஈரானிற்கு அருகில் இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டன!

Thursday, June 13, 2019
Tagsஈரானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள யப்பான் பிரதமர் சின்ஷோ அபே, ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா கோமேனியை இன்று சந்தித்தார். இதேநேரம், ஓமான் விளைகுடாவில் இரண்டு எண்ணெய்க்கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன.

இன்று நடந்த இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது இன்னும் தெரிய வரவில்லை. டோர்ப்பிட்டோ மற்றும் காந்தக்குண்டு மூலம் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன.

நோர்வே நிறுவனத்திற்கு சொந்தமான புரண்ட் அல்டையர் என்ற எரிபொருள் டாங்கர், டோர்ப்பிட்டோ தாக்குதலுக்குள்ளானது. இது கட்டார் நாட்டிலிருந்து 75,000 தொன் பெட்ரோல்-இரசாயனங்களை ஏற்றியபடி தாய்லாந்திற்கு சென்றதுது. எனினும், கப்பலின் உரிமையாளர், தாக்குதலுக்கு உள்ளான கப்பல் மூழ்கவில்லையென்றார்.

மாலைதீவிற்கு சொந்தமான கப்பல் காந்தக்குண்டு தாக்குதலுக்கு இலக்கானது. கப்பல் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

கப்பலில் இருந்த 44 மாலுமிகளை மீட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்தது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.