நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, June 13, 2019

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் பொறிக்கப்பட்டது தீவிரவாதியின் பெயரா?

Thursday, June 13, 2019
Tags


உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல்களுக்கு இலக்கான கொச்சிக்டை புனித அந்தோனியார் தேவாலயம் புனரமைப்பு செய்யப்பட்டு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

இதில் தாக்குதலின் போது தேவாலயத்தில் உயிரிழந்த அப்பாவி மக்களின் பெயர்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த பெயர் பட்டியலில் “மொஹமட் ரிஸ்வான்” என்ற முஸ்லிம் ஒருவரின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் டுவிட்டர், பேஸ் புக் என சமூகவலைத்தளங்களில் மிகவும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த நபரே தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியதாகவும், அவரது பெயரை கல்வெட்டில் பதித்துள்ளதாகவும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் “மொஹமட் ரிஸ்வான் தற்கொலை தாரி அல்ல எனவும் அவர் தனது பெற்றோர் சகிதம் உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனைகளுக்காக வந்த 15 வயது மாணவன்” என கொச்சிக்கடை தேவாலய பிரதம மதகுரு குறிப்பிட்டுள்ளார்.