நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, June 11, 2019

வடக்கு கிழக்கு மாகாணத்தில் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கல் நிகழ்வு

Tuesday, June 11, 2019
Tagsதொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி நீண்டகாலமாக ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படாது இருந்த தொண்டர் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனங்கள் இந்த மாதம் திருகோணமலையில் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்துக்கலாச்சார மண்டபத்தில் பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் கல்வி அமைச்சர் சட்டத்தரணி கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் பங்குபற்றுதலோடு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.
கடந்த 30 வருட காலமாக இடம்பெற்ற போரின் தாக்கத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியராக பணியாற்றியவர்களுக்கு ஆசிரியர்களுக்கு நியமனம் கிடைக்காத பிரச்சனை நீண்ட காலமாக நிலவி வந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு கல்வி இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற பின் எடுத்த முயற்சியின் பயனாக கடந்த மாதம் 1,302 தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகப் பரீட்சை இடம்பெற்றிருந்தது.வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 1,302 பேர் இந்த நேர்முகத்தேர்வில் பங்குபற்றி இருந்தனர். 
இதில் தகுதிபெற்றவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி திருகோணமலையில் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்துக்கலாச்சார மண்டபத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.