நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, June 14, 2019

இந்துக்களையும் பௌத்தர்களையும் இணைக்கும் தீவிர முயற்சியில் இறங்கிய ரத்ன தேரர்! வவுனியாவில் ஆரம்பம்

Friday, June 14, 2019
Tags


நாட்டில் பௌத்த, இந்து மக்கள் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

வவுனியாவில் இந்து மத குருமார்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் கூறுகையில்,

நாட்டில் அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கும், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பௌத்த, இந்து மக்கள் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டும்.

அரசியல் பிரச்சினைகளை ஒரு புறம் வைத்து முதலில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டும்.

10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற யுத்தத்தை மனதில் கொண்டு பௌத்த, இந்து மக்கள் பிரிவினையுடன் செயற்படக் கூடாது.

வடக்கு மற்றும் கிழக்கில் சில இடங்களில் இவ்விரு மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இடையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே நாம் வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளோம்.

நாட்டில் தற்போது இந்து, பௌத்த மக்கள் மத்தியிலும் சில பிரதேசங்களில் ஒற்றுமையின்மை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் இந்து - பௌத்த மக்களின் ஒற்றுமை நாட்டுக்கு அவசியமாகியுள்ளது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.