நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, June 14, 2019

தென்னாசியப்பிராந்தியத்திலேயே ஐ.எஸ் தலைதூக்காத வகையில் நடவடிக்கை!

Friday, June 14, 2019
Tags


உயிர்த்தஞாயிறு தாக்குதலை அடுத்து தென்னாசியப்பிராந்தியத்தில் ஐ.எஸ் ஐ எஸ் அமைப்பு தனது செயற்பாட்டை மேற்கொள்வதை தடுக்கும் வகையில் இந்தியா உட்பட ஏனைய நாடுகளுடன் இணைந்து ஸ்ரீலங்கா அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் ஆங்கில் ஊடகமொன்றுக்கு அளித்த விரிவான பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்தப்பேட்டியில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு

உயிர்த்தஞாயுிறு தாக்குதல்களுக்குப் பின்னர் நாங்கள் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளோம்.விசாரணைகள் முழுவேகத்தில் சென்று கொண்டிருக்கின்றன.இந்த விசாரணைகளின்போது சிலர் ஐ.எஸ் ஐ எஸ் அமைப்புடன் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் தம்மைத்தாமே அழித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இதன்மூலம் அவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்களில் யாரேனும் வெளிநாடுகளில் ஈடுபடுகின்றார்களா என கணடறியவும் அதனை தடுக்கவும் நாம் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயற்படுகிறோம்.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் வகையில் ஸ்ரீலங்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றன. பயங்கரவாதத்தை ஒழிக்க தனி நாடொன்றால் முடியாது. இது ஒரு குழுவின் முயற்சியாலேயே முடியும். 

உயிர்த்தஞாயிறு தாக்குதல்களை அடுத்து பயங்கரவாதிகள் இந்திய நகரங்களுக்குள் ஊடுருவியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.எனினும் இந்த செய்தியை முதலில் இந்திய புலனாய்வுத்துறையே எமது புலனாய்வுத் துறைக்கு தெரிவித்திருந்தது.

தாக்குதல்களை அடுத்து இந்தியா உட்பட பலநாடுகள் விசாரணைகளுக்காக தமது குழுக்களை ஸ்ரீலங்காவுக்கு அனுப்பிவைத்துள்ளன.தற்போதும் அந்த குழுக்களில் சில ஸ்ரீலங்காவில் தான் உள்ளன.இந்த விசாரணை நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா நம்புகிறது.பல நாடுகள் இதற்கு உதவுகின்றன. குறிப்பாக மேற்கு நாடுகள் இதன் ஒருபகுதியாக செயற்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.