நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, June 13, 2019

“புத்தர் சிலைகளை உடைத்து விட்டு என்னிடம் வாருங்கள்” - சஹ்ரானின் உத்தரவு

Thursday, June 13, 2019
Tags


சஹ்ரானின் உத்தரவுக்கு அமையவே மாவனெல்லையில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் இந்த விடயத்தை சி.ஐ.டி. நேற்று தெரிவித்துள்ளது.

மாவனெல்லை நகரை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்டு விளக்மறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த வழக்கு விசாரணை நேற்று மாவனெல்லை நீதிவான் உப்புல் ராஜகருணா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இந்தச் சிலை உடைப்பு விவகாரத்தை பூரணமாக நெறிப்படுத்தியுள்ள ஸஹ்ரான் அதனை முன்னெடுத்த சந்தேக நபர்களுக்கு ‘நீங்கள் போய் சிலைகளை உடைத்துவிட்டு என்னிடம் வாருங்கள்’ என கூறியுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரி நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

இதனைவிட இந்தச் சிலை உடைப்பு விவகாரத்தில் சந்தேகநபர்கள் சிலர் சில நாட்களில் கைதான நிலையில் அவர்களைப் பிணையில் விடுவித்துக் கொள்ள சட்டத்தரணிகளுக்கு வழங்குமாறு கூறி ஸஹ்ரான் 20 இலட்சம் ரூபா பணத்தை இப்ராஹீம் மெளலவி எனும் சந்தேகநபருக்கு கொடுத்துள்ளமை தொடர்பிலும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் அது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது