நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, June 14, 2019

மக்களின் எதிர்ப்பால் தொலைத் தொடர்புக்கோபுரம் அமைக்கும் பணிகள் இடை நிறுத்தம்

Friday, June 14, 2019
Tagsவவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம், மயானத்திற்கு அருகில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட தொலைத் தொடர்புக்கோபுரம் (ரவர்) மக்களின் கடும் எதிர்ப்புக்காரணமாக இடம்பெற்ற பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா இறம்பைக்குளம் மயானத்திற்கு அருகில் நேற்று முன்தினம் தனியார் நிறுவனம் ஒன்றினால் வீதிக்கு அருகில் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து குடியிருப்பு, பாடசாலை, ஆலயம், மயானத்திற்கு அருகில் அமைக்கப்படும் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளதுடன் கட்டட ஒப்பந்தப்பணியாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் நகரசபையின் கவனத்திற்குக் இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டு தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக இன்றிலிருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நகரில் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான கோபுரங்களை அமைத்து எதிர்காலத்தில் அவற்றை தொலைத் தொடர்புக் கோபுரம் போன்று பாவிப்பதற்கு குறித்த நிறுவனம் முயற்சித்துள்ளதாக மக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்து தமது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நகரசபையினால் இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் நகரசபையில் அனுமதிக்கான விண்ணப்பம் குறித்த தனியார் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

19அடி உயரமும், 15அடி அகலத்திலும் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்களின் எதிர்ப்புக் காரணமாக நகரசபையினால் இப்பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.