நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, June 9, 2019

சமுர்த்தி நிகழ்வில் அரங்கேறிய கவர்ச்சி நடனத்திற்கு ஒன்றரை இலட்சம் கொடுப்பனவு!

Sunday, June 09, 2019
Tagsகிளிநொச்சி மத்திய கல்லுரி மைதானத்தில் கடந்த 02 ம் திகதி இடம்பெற்ற சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அரங்கேற்றப்பட்ட சிங்கள பாரம்பரிய முறையிலான நடனத்திற்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 02 ம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 13,078 சமுர்த்தி பயனாளிகளில், உத்தியோகபூர்வமாக 4500 பேருக்கு சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது சில நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. இதி்ல் அரங்கேற்றப்பட்ட நடனம் ஒன்று, தமிழ் சூழலில் மிக கவர்ச்சிகரமானதாக அமைந்திருந்தது. அந்த கவர்ச்சி நடனத்துக்கே கொடுப்பனவாக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வழங்குவதற்கு நிதி செலவு அறிக்கைகளில் கணக்கு காட்டப்பட்டுள்ளது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் இந்த நடனம் அரங்கேற்றப்பட்டது.

இந்த நிகழ்வுகளுக்குரிய ஏற்பாட்டுச் செலுவுகளை ஒவ்வொரு வறிய சமுர்த்தி பயனாளிகளிடமிருந்தும் 500 ரூபா அறவிடுமாறு சுற்றுநிருபம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வறிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் சமுர்த்தி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் இப்படியான செலவினங்கள் அவசியமா என்றும், மக்களிடம் பணம் அறவிடுவது முறையானதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.