நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, June 14, 2019

யாழ்ப்பாணத்தின் தீவு ஒன்று இராணுவத்தால் முற்றுகை; பயங்கர வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

Friday, June 14, 2019
Tagsயாழ்.நகரை அண்டிய சிறுத்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட் களை படையினர் மற்றும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மிக அபாயகரமான பெருந்தொகை வெடிபொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனுள் டெட்டனேட்டா்கள், சீ-4 வெடி மருந்து மற்றும் பல வெடிமருந்துகள் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றன என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.