நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, June 14, 2019

இளைஞர்கள் கடத்தல் சம்பவம் - கடற்படை உத்தயோகத்தர் பிணையில் விடுதலை

Friday, June 14, 2019
Tagsஇளைஞர்கள் கடத்தல் சம்பவம் - கடற்படை உத்தயோகத்தர் பிணையில் விடுதலை 
கொழும்பிலும், அண்மித்த பிரதேசங்களிலும் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படை உத்தயோகத்தரை, கடும் நிபந்தனைகளுடன்  கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

இந்த வழக்கின் 11 ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டு புறக்கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படை அதிகாரியான சஞ்சீவ சேனாரத்ன சார்பாக மேல் நீதிமன்றத்தில் இன்று பிணைக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

பிணைக் கோரிக்கையை கவனத்திற்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபந்தி, அந்தக் கடற்படை உத்தியோகத்தரை, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையிலும், பத்து இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணைகளிலும் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

பிணை வழங்கப்பட்ட பின்னர், சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என கடுமையான எச்சரிக்கை விடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதியான கடற்படை உத்தியோகத்தரின் கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

அத்துடன் மாதாந்தம் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் புலனாய்வுப் பிரிவிற்கு சென்று, கையொப்பம் இடவேண்டும் என்றும் பிரதிவாதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடும் பிணை நிபந்தனை விதித்துள்ளது.