நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, June 13, 2019

இரவோடு இரவாக டுபாயிலிருந்து கொண்டுவரப்பட்ட அந்த நபர்கள் யார்? தீவிர விசாரணையில் புலனாய்வுத்துறை!!

Thursday, June 13, 2019
Tags


டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 5 பேர் டுபாயில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நேற்று இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினர் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.