நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, June 14, 2019

வெளியானது தமிழக ஐ.எஸ் சந்தேகியின் புகைப்படம்! பயங்கர தாக்குதல்களுக்கு திட்டமிட்டாராம்?

Friday, June 14, 2019
Tags


இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்ட ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புவைத்திருந்ததாக கைதுசெய்யப்பட்ட அசாருதீன் எனும் சந்தேகியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

குறித்த சந்தேக நபர் நேற்றைய தினம் கோவையில் கைதுசெய்யப்பட்ட நிலையிலேயே அவரை தேசிய புலனாய்வுப் பிரிவு அழைத்துச் செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

குறித்த சந்தேகி பயண முகவர் நிலையம் ஒன்றின் ஊழியராக இருந்துள்ளதுடன் தனது khilafah gfx எனும் பெயரிலமைந்த முகநூல் பக்கத்தினூடாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புத் தொடர்பான பரப்புரைகளை உள்ப்பெட்டியூடாக பரிமாறி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஆட்களைத் திரட்டி மூளைச்சலவை செய்து பரந்துபட்ட தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டமை தொடர்பான பல அதிர்ச்சித் தகவல்களும் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்துள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் தீவிரவாதி சஹ்ரான் தலைமையில் நடத்தப்பட்ட பயங்கர குண்டுத் தாக்குதலின்போது ஏராளமான பொதுமக்கள் பலியாகியிருந்தமை தெரிந்ததே.

அதுபோன்றதொரு விரிவான பரந்துபட்ட தாக்குதலை மேற்கொள்வதற்கே குறித்த அசாருதீன் உள்ளிட்ட கும்பல் திட்டமிட்டிருந்ததாக புலனாய்வுத்துறைத் தகவல்கள் கூறுகின்றன. எவ்வாறாயினும் இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களைப்போல் தமிழகம் மற்றும் கேரளாவிலும் நடத்தப்பட்டிருந்தால் பாரிய மனிதப்பேரவலம் நிகழ்ந்திருக்கும் என்றும் குறித்த மாநிலங்கள் மயிரிழையில் தப்பியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.