நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, June 12, 2019

மலைவிழுங்கி திருடர்கள்: சஹ்ரானின் பணத்தை தேடும் சிஐடியாக நடித்து கொள்ளையிட்டவர்கள் சிக்கினர்!

Wednesday, June 12, 2019
Tagsஅக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தமிமை சிஐடியினர் எனக் குறிப்பிட்டு, சோதனை செய்வதாக கூறி கொள்ளையிட்ட சம்பவத்தின் சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி பி.சிவகுமார் உத்தவிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று, புதுர்ப் பகுதியில் உள்ள வீடொன்றுறில் இந்த கொள்ளைச்சம்பவம் நடந்தது. வாகனமொன்றில் சென்ற சிலர், தம்மை சிஐடியினர் என குறிப்பிட்டு, வீட்டில் சோதனை செய்யப் போவதாக கூறினர். வீட்டில் மூன்று பெண்கள் இருந்தனர். அசாதாரண நிலைமை நிலவியதால், சந்தேகமின்றி சோதனைக்கு அனுமதித்தனர்.

வீட்டுக்குள் நுழைந்த ஆசாமிகள், வீட்டிலுள்ள பணம் மற்றும் நகைகளை எடுத்து வருமாறு கூறினர். அவற்றை ஒன்றாக்கி, அறையொன்றில் வைக்க உத்தரவிட்டனர்.
பின்னர் அந்த பணம், நகை சஹ்ரானுடன் தொடர்புடையதா என விசாரித்தனர். அந்த பெண்கள் மறுத்தபோதும், தமக்கு சந்தேகமுள்ளதாகவும், அவற்றை சோதனையிட பெண் பொலிசாரும், வேறு சில அதிகாரிகளும் மாலை 5 மணியளவில் வருவார்கள் என்றும், அதுவரை அறைக்குள் யாரும் நுழையக்கூடாதென எச்சரிக்கை செய்தனர்.

இதன்பின்னர் வீட்டில் சோதனை நடத்திய ஆசாமிகள், நகை இருந்த அறைக்குள்ளும் நுழைந்து சூட்சுமமாக நகைகளை கொள்ளையிட்டு, வீட்டுக்காரர்களிற்கு சந்தேகம் வராமல் வெளியேறி சென்றனர். போகும்போது, வீட்டிலிருந்த சிசிரிவி கமரா மற்றும் அதன் காட்சி சேமிப்பு கருவிகளையும் கழற்றி சென்றுள்ளனர்.

விசாரணை நடத்த பெண் பொலிசார் வருவார்கள் என வீட்டுக்காரர்கள் காத்திருந்தனர். இரவு 8 மணியாகியும் யாரும் வரவில்லை. இதையடுத்து, உறவினர்களின் உதவியுடன், அக்கரைப்பற்று பொலிசாருக்கு தகவல் அனுப்பினார்கள்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று பொலிசார், அந்த அறைக்குள் நுழைந்தபோது, பணம் மற்றும் நகை திருடப்பட்டது தெரிய வந்தது.

26 பவுண் நகைகளும், நான்கு இலட்சத்து எட்டாயிரம் ரூபா பணமும் களவாடப்பட்டது.

இதையடுத்து, அந்த பகுதியிலுள்ள சிசிரிவி கமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய பொலிசார், திருடர்கள் பயன்படுத்திய வாகனத்தை அடையாளம் கண்டனர். அதனடிப்படையில், சந்தேக நபர்கள் நால்வரை கண்டி வத்தேகம பிரதேசத்தில் வைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளைச் சம்பவத்திற்கு பாவிக்கப்பட்ட வாகனம், கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் நகைகளில் ஒரு பகுதியினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேச நபர் அம்பாறை விஷேட பொலிஸ் குழுவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.