நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, June 14, 2019

விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்...??

Friday, June 14, 2019
Tagsநாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தரப்பினர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் நான்கரை வருடங்கள் நிறைவடைய முன்னர், ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முடியாது.

எனினும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதாயின், அல்லது மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்துவதாயின், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.