நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, June 8, 2019

சிட்னியில் கடும் பனிப்பொழிவு! விமான சேவைகள் பாதிப்பு!

Saturday, June 08, 2019
Tagsஅவுஸ்ரேலியாவின் சிட்னியில் கடும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சிட்னியில் தரையிறங்க வேண்டிய சில விமானங்கள் அவுஸ்ரேலியாவின் ஏனைய சில விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், Qantas, Virgin Australia விமானச் சேவைகளில் சிலவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

எனினும் தற்போது பனிமூட்டம் குறைவடைந்துள்ளதாகவும், விமானச் சேவை வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.