நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, June 13, 2019

மூவருக்கும் எதிராக குவிந்த முறைப்பாடுகள்!

Thursday, June 13, 2019
Tags


விசேட தெரிவுக் குழுக் கூட்டம் மீண்டும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு பாராளுமன்ற கட்டத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவி விலகிய முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளான ஹிஸ்புல்லா,

அசாத்சாலி, றிசாத் பதியுதீன் ஆகியோருக்கு எதிராக 27 முறைப்பாடுகள் நேற்று மாலை வரை கிடைக்கபெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு எதிரான முறைப்பாடுள் சிரேஷ்ட பொலிஸ் அதியட்சகர் தலைமையில் கடந்த நான்காம் திகதியிலிருந்து நேற்று மாலை வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இந்த முறைப்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக 12 முறைப்பாடுகளும், அசாத் சாலிக்கு எதிராக 5 முறைப்பாடுகளும்,

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 2 முறைப்பாடுகளும் இவர்கள் மூவருக்கு எதிராக 8 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் அனைத்தும் மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.