நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, June 14, 2019

சவுதியில் இன்ரபோல் மடக்கிய மில்ஹான்! சஹ்ரானுக்கு அடுத்ததலைவர் ரெட் நடவடிக்கையில் சிக்கினார்!!

Friday, June 14, 2019
Tags


இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் சவுதிஅரேபியாவில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்ரப்போல் தனது சிவப்பு நடவடிக்கையில் கைதுசெய்த விடயம் தற்போது பகிரங்கமாகியுள்ளது.

முன்னதாக தாமே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக சிறிலங்கா குற்றப்புலனாய்வுத் திணைக்களம் செய்திகளை வெளியிட்டிருந்தது.

ஆனால் இன்றுமாலை பிரான்சின் லியோன் நகரிலுள்ள இன்ரபோல் தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பில் தமது வலையமைப்பால் மத்தியகிழக்கு நாடு ஒன்றில் அதிரடியாக கைதுசெய்யப்பட்ட இவர்கள் ஐவரும் அதன்பின்னர் பின்னர் நாடு கடத்தல் நகர்வுடன் சிறிலங்கா குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தகுழுவில் கைது செய்யப்பட்ட அகமட் மில்ஹான் ஹயாது முகமட்தான் சஹ்ரானுக்குப் பின்னர் தௌஹீத் ஜமாஆத் அமைப்பின் தலைமைப்பொறுப்பை ஏற்றிருந்தாகவும் ஏனைய நால்வரும் அவருக்கு உதவியாக செயற்பட தயாரானதாகவும் குறிப்பிடப்படுகின்றது. .

மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐந்துபேரும் தற்போது சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகளினால் கொழும்பில் வைத்து விசாரிக்கபட்டு வருகின்றனர்