நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, June 12, 2019

பாராளுமன்றத்தை முடக்குவதற்கு முன் ஜனாதிபதி மீது நம்பிக்கை குற்றவியல் பிரேரணையை சமர்ப்பியுங்கள் ; எம்.கே.சிவாஜிலிங்கம்

Wednesday, June 12, 2019
Tagsஜனாதிபதி பாராளுமன்றத்தை முடக்கி குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர் அவர் மீது அவ நம்பிக்கை குற்றவியல் பிரேரணையை சமர்ப்பித்து இந்த அரசாங்கத்தை தக்க வைக்கமுடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழு விசாரணையை இடை நிறுத்துதல், அமைச்சரவை கூட்டப்படாமை தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் போட்டித் தன்மை இடம்பெற்று வருவது தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

ஜனாதிபதி பாராளுமன்றத்தை முடக்கி குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர் அவர் மீது அவ நம்பிக்கை குற்றவியல் பிரேரணையை சமர்ப்பித்து இந்த அரசாங்கத்தினை குழப்பமின்றி கொண்டு நடாத்த முடியும் அவ்வாறு செய்யாதுவிட்டால் நாட்டில் பெரும் குழறுபடிகள் இடம்பெற்று அசாதாரண சூழ்நிலைதான் ஏற்படும். ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற தாக்குதல் சம்வங்கள் கூட மறந்துவிட்ட நிலையே ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆறுதல் நிவாரணங்களே வழங்காத நிலையில் பதவி மோகத்தினால் கதிரைப் பிடிப்பதற்கு போட்டிபோடுகின்றார்கள்.

நாட்டு மக்களைப் பற்றி சிந்திப்பவர்களாக இல்லை ஜனாதிபதித் தேர்தல் வந்தால் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றம், மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற எண்ணம் சிந்தனையில் பேரினவாதக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றார்கள். இதற்கு சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு ஏற்படுவதற்கும் வலை வீசும் படலங்கைள ஆரம்பித்து விட்டார்கள்.

இது ஆரோக்கியமான செயற்பாடாகத் தெரியவில்லை மக்களுக்கான நல்ல விடையங்கள் நடப்பதற்கான சமிஞ்ஞைகள் கிடைக்கவில்லை.

ஜனாதிபதி மீது அவநம்பிக்கை குற்றவியல் பிரேரணையைச் சமர்ப்பித்து நாட்டினை ஓரளவுக்கேனும் சீராகக் கொண்டு நடாத்த முடியும் அவ்வாறு செய்வதற்கு ஏன் இவர்கள் தயக்கம்காட்டுகின்றார்கள். அவ நம்பிக்கை பிரேரணைக்கு 113 பாராளுமன்ற உறுப்பினருடைய கையொழுத்தைப் பெற்று சமர்ப்பிப்பதன் மூலம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். இல்லை என்று சொன்னால் பொதுத் தேர்தலுக்கு இணங்கி பாராளுமன்றத்தைக் கலைப்பதுதான் ஒரு வழி இவ்வாறு செய்வதன் மூலம் நாட்டு மக்கள் புதிய தலைமையை தெரிவு செய்து இந்த நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்லமுடியும் என்றார்.