நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, June 10, 2019

தமிழர்களாக இருக்கட்டும் முஸ்லிம்களாக இருக்கட்டும் அவர்கள் அவர்களுடைய நாட்டுக்கு அவர்கள் வெளியேற வேண்டும்.

Monday, June 10, 2019
Tagsஅரபு நாடுகளின் அரவணைப்பு எமக்குத் தேவையில்லை. இது பௌத்த பூமி... 

-அதுரலிய ரத்தன தேரர்-
    
அரபு நாடுகளின் உதவி எமக்குத் தேவையில்லை. மேலும் அரபு நாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களையும் திருப்பி எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க  வேண்டும். 

மேலும் அவர்களுக்கான வேலைத்திட்டத்தை எமக்கு ஆதரவான நாடுகளான சீனா, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளில் வேலைத்திட்டத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரத்ன தேரர் செவ்வி ஒன்றில் சீறியுள்ளார்.

 அரபியர்களின் அரபு எமக்குத் தேவையில்லை அரபியர்களின் செல்வாக்கும் எமக்குத் தேவையில்லை. இது சிங்கள பூமி. சிங்களவர்கள் மட்டுமே இங்கு வாழ உரிமை உண்டு. தமிழர்களாக இருக்கட்டும் முஸ்லிம்களாக இருக்கட்டும் அவர்கள் அவர்களுடைய நாட்டுக்கு அவர்கள் வெளியேற வேண்டும்.

இல்லையேல்  பௌத்த சமய விதிப்படி இலங்கையில் வாழ வேண்டும் என்றும் பொங்கினார்.

எதிர்வரும் காலங்களில் இது நூறு  வித பௌத்தர்கள் வாழும் பூமியாக மாற வேண்டும் என்பதே எங்களது நோக்கம் அதற்காக செயல்படுவதே எங்களது குறிக்கோளாக இருந்து கொண்டு இருக்கின்றது என்றும் ரத்தன தேரர் கருத்துத் தெரிவித்தார்.

முகநூல் வலைத்தளங்களில் அரபு நாடுகள் இல்லாவிட்டால் இலங்கை இல்லை என்று தம்பட்டம் அடிக்கும் அரபிய அடிமைகளே, இந்த பௌத்த பூமி அரபியர்களுக்கு என்றைக்கும் அடிமையாக இருக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு அரபுநாடு தேவை என்றால் நீங்கள் தாராளமாக வெளிச் செல்லலாம் என்று அத்துரலிய ரத்ன தேரர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.