நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, June 11, 2019

ஹிஸ்புல்லாஹ்வின் இனவாத உரையால் சர்ச்சை! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Tuesday, June 11, 2019
Tags


கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய இனவாத உரைக்கு எதிராக எதிராக பௌத்த அமைப்பு ஒன்று முறைப்பாடு செய்துள்ளது.

காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசலில் ஒன்றில் கருத்து வெளியிட்ட ஹிஸ்புல்லாஹ், இலங்கையில் மாத்திரமே முஸ்லிம்கள் சிறுபான்மையினர் எனவும் சர்வதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துரலிய ரத்ன தேரரின் தலதா மாளிகைக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு வந்த சில தேரர்கள் பிழையான கருத்துக்களை வெளியிட்டதாக ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான இனவாத கருத்து மூலம் தேரர்கள் மீது முஸ்லிம்கள் துவேசம் ஏற்படும். இதன் காரணமாக இன முரண்பாடுகள் ஏற்படும் என பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பௌத்த அமைப்பின் அகுனுகல்லே ஸ்ரீ ஜனாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.