நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, June 13, 2019

முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப்புலிகள் சொந்தமாக தயாரித்த குண்டுகள்...!

Thursday, June 13, 2019
Tags


முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொக்கணைப் பகுதியில் விடுதலைப்புலிகளின் இரண்டு தமிழன் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

பொக்கணைப் பகுதிகுதியில் நேற்று முந்தினம் காணி துப்பரவு செய்துகொண்டிருக்கும் போது நிலத்தில் புதைந்திருந்த நிலையிலேயே இரண்டு தமிழன் குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் குறித்த இடத்தில் உள்ள தமிழன் குண்டினை அடையாளப்படுத்தி நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக அதனை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.