நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, June 2, 2019

200 கி.மீ வேகத்தில் பறந்த பள்சர்!! நேரில் பார்த்து அதிர்ந்தனர்…ஓடியவர்கள் இவர்கள்தான்!! (புகைப்படங்கள்)

Sunday, June 02, 2019
Tags


அதி வேகமாக மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் காணும் காட்சி போல் இருவரும் பள்சரில் சென்றதாகவும் அதைப் பார்த்த போது இவர்கள் நிச்சயம் விபத்துக்குள்ளாவார்கள் என தான் யோசித்ததாகவும் முறுகண்டிக்கு அண்மையி் நேற்று நடந்த விபத்துக்காட்சியை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் வந்த இவர்கள் அதே பக்கத்தால் போய்க் கொண்டிருந்த பஸ்சிற்குப் பின்னால் போய் மோதியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கிளிநொச்சிப் பகுதியில் லீசிங்கில் மோட்டார்சைக்கிள்களை் பெறும் இளைஞர்கள் காவாலித்தனமான  செயல்களி்ல் ஈடுபடுவதாகவும் எந்தவித உழைப்பும் இன்றி திரியும் இவர்கள் எதற்காக இவ்வாறான வலுக்கூடிய மோட்டார் சைக்கிள்களை ஓடித்திரிய முற்படுகின்றார்கள் எனவும் அப்பகுதியைச் சேர்ந்தர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சினிமா கதாநாயகர்கள்  போல் விதம் விதமா போட்டோக்கள் எடுத்து அவற்றை பேஸ்புக்கி்ல் போடுவதே காவாலிகளின் தொழிலாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.