onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Sunday, June 30, 2019

150 குழந்தைகள் இறப்புக்கான காரணம் இது தான், கண்டறிந்த எய்ம்ஸ் மருத்துவக் குழு

  admin       Sunday, June 30, 2019


பீகாரில் என்செஃபாலிடிஸ் எனும் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பலானோர் ஆஸ்பெடாஸ் மேற்கூரை கொண்ட வீடுகளில் வசித்தவர்கள் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

என்செஃபாலிடிஸால் 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தததற்கான காரணத்தை அறிய எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அவர்களின் கணிப்பின் படி, உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் இரவில் கூட வெப்பம் இறங்கக் கூடிய ஆஸ்பெடாஸ் மேற்கூரைகள் கொண்ட வீடுகளில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

மார்ச் மாதம் முதல் நீர்ச்சத்துக் குறையை நீக்க வழங்கப்பட வேண்டிய ஓ.ஆர்.எஸ். பவுடர் சுகாதாரத்துறையால் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே வளர்சிதை மாற்றக் கோளாறு சார்ந்த நோய்கள், பலவீனமாக இருப்பது, வயதை விட குறைந்த எடையில் இருப்பது, ஊட்டச்சத்து குறைபாடு என பாதிக்கப்பட்ட குழந்தைகளே அதிகம் பலியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாள்தோறும் 500 புற நோயாளிகள் வந்து சென்ற பீகார் முசாஃபர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் 3 அல்லது 4 பேர் இருந்தும் குழந்தைகள் விரைவில் குணமாகாததற்குக் காரணம் என எய்ம்ஸ் மருத்துவர் குழு கணித்துள்ளது. 

logoblog

Thanks for reading 150 குழந்தைகள் இறப்புக்கான காரணம் இது தான், கண்டறிந்த எய்ம்ஸ் மருத்துவக் குழு

Previous
« Prev Post