நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, May 22, 2019

VIPக்கள் பயணிக்கும் போது வீதிகளை மூட வேண்டாம் – ஜனாதிபதி

Wednesday, May 22, 2019
Tags


முக்கிய பிரமுகர்கள் செல்வதற்காக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வீதிகளை மூட வேண்டாம் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாதுகாப்பு பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் செல்லும் போது வீதிகள் மூடப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

அதன்படி குறித்த பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்குமாறும் பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் சிரமங்கள் ஏற்படாத வகையில் பிரமுகர்களின் வாகனங்களை செலுத்த அவர்களுக்கு அறிவுரை வழங்குமாறும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்