நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, May 23, 2019

பஞ்சாபில் முன்னிலை வகிக்கிறார் சன்னிலியோன்! : வைரலாகும் அர்னாப் காணொளி | #Sunnyleone

Thursday, May 23, 2019
Tags2019ம் ஆண்டின் இந்திய மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை முதல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

கடந்த 2014 இந்திய மக்களவைத் தேர்தலில், பாஜக 282தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அதேபோல் இந்த முறையும் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என இதுவரையிலான வாக்கு எண்ணிக்கைகளை பார்த்தால் தெரிகிறது. கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 100க்கும் மேற்பட்ட இடங்களிலும், இதர காட்சிகள் 100க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சன்னி தியோல் குறித்து ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தேர்தல் முடிவுகளுக்கான நேரலை நிகழ்ச்சியில் பிரபல ஊடகவியலாளர் அர்னாப் குறிப்பிட்டு பேசும்பொழுது, சன்னி தியோலுக்கு பதிலாக அவசரத்தில் சன்னி லியோன் என படித்துள்ளார்.
அதாவது இத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் சன்னிலியோன் முன்னிலை வகித்து வருகிறார் என அவசரத்தில் பேசியுள்ளார்.

சன்னி லியோனை இந்தியா தாண்டி உலகம் முழுக்க அறியாதவர்கள் எவரும் இல்லையென்பதால், அர்னாபின் அந்த காணொளி சமூகவலைதளங்களில் வைரலாகத் தொடங்கியது. இதையடுத்து பலரும் சன்னி லியோனை ட்விட்டரில் மென்சன் செய்யத் தொடங்கினர். இதனால் #Sunnyleone எனும் ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது.

பின்னர், இந்த விஷயத்தை கவனித்த சன்னி லியோன் அதற்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில, "எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறேன்" என நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ளார். சன்னிலியோனின் இந்த பதில் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகிறது.