onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Sunday, May 12, 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை செய்த ISIS தீவிரவாதிகளை சாகும் வரை தூக்கில் தொங்கவிட வேண்டும்!கடும் சீற்றத்தில் மஸ்தான்!

  admin       Sunday, May 12, 2019

 
தேர்தல்களில் வெல்ல முடியாதவர்கள் தற்போதைய சூழலை வைத்து வங்குரோத்து அரசியல் செய்கின்றனர்
காதர் மஸ்தான் எம்.பி குற்றச்சாட்டு

மாகாணசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் வெல்ல முடியாத கட்சியொன்று இங்கு இருக்கிறது. அந்த கட்சியின் இளைஞர் அணி செயலாளரிடம் இணையத்தளம் ஒன்றுமுன்னது. அவர்கள் கடந்த தேர்தலிலும் இனவாதம் கக்கிப் பார்த்தார்கள் வெல்ல முடியவில்லை. இம்முறை உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தியும் இனவாதம் கக்குகிறார்கள். இவ்வாறானவர்கள்தான் இளைஞர்களை தமது தேவைக்கு பாவிப்பார்கள். ஆகவே விழிப்புடன் இருங்கள் என தமிழ் இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான்.

வவுனியா திருநாவல்குளத்தில் உள்ள விளையாட்டுக்கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் நடந்த மிலேச்சத்தனமான தாக்குதல் இந்த தாக்குதலாகத்தான் இருக்கும். இதற்கு இஸ்லாமிய பயங்கரவாதம் என்கின்றனர். ஆனால் அனைத்து இல்லாமியர்களையும் அவ்வாறு எண்ண வேண்டாம். அனைத்து சமூகத்திலும் தீவிர போக்குடையவர்கள் இருக்கின்றார்கள். எனினும் இது ஒரு குறிப்பிட்டவர்களே செய்துள்ளனர் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளேன். இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றேன். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவவாறான தாக்குதலை செய்தவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும். அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் கொடுக்காமல் அரசு எடுக்கும் செயற்பாடுகளை நாங்கள் பாராட்டுகின்றோம். அரசும் முன்பே சில நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பே இவ்வாறு கடும் போக்குடன் சிலர் பேசுகின்றனர். அவர்கள் தொடர்பில் அவதானம் தேவை என கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த நேரம் அரசாங்கம் சிந்திக்கவில்லை. ஏனெனில் முஸ்லிம்களில் இவ்வாறு உருவாக மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. சில இடங்களில் நாங்கள் கூட சொன்னோம் இவ்வாறான நிலை வராது என்று. எல்லோருடைய நம்பிக்கைக்கும் மண் அள்ளி போட்டது போலவே இந்த செயற்பாடுகள் அமைந்துள்ளது.

இச் சூழலிலேயே நான் பத்திரிகையாளர் மாநாடொன்றில் தெரிவித்த கருத்தை வவுனியாவை சேர்ந்தவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திருவுபடுத்தி வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறான சூழலிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கின்றார்கள்.
ஒரு கட்சியின் இளைஞரணியின் செயலாளர் இணையத்தளம் வைத்துள்ளார். அவர் அந்த இணையத்தளத்தின் ஊடாக பிழையான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றார். எனது ஊடக சந்திப்பை ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு விடயமாக தமக்கு தேவையானவற்றினூடாக வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் இவர் இந்த பயங்கரவாத தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என கூறியதாக தெரிவித்துள்ளார். இவ்வாறான மிலேச்சத்தனமாக தாக்குதலை செய்திருக்கும்போது அவ்வாறு யார் சொல்வார்கள். ஆகவே இவ்வாறான செயற்பாடுகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியே.

அவர்களுக்க நேரடியாக போட்டியிட்டு தேர்தலில் வெல்ல முடியவில்லை. சென்ற முறை தேர்தலில் இனவாதத்தை கக்கினார்கள். அதிலும் அவர்களால் வெல்ல முடியவில்லை. இவ்வாறான நிலையிலேயே இதுவே சிறந்த சந்தர்ப்பம் என்று இருக்கின்றார்கள். அரசியல் வாங்குரோத்தாகி இனப்பிரச்சனைகளை ஏற்படுத்தும் முகமாக இனவாத கருத்துக்களை தெரிவித்து பொய்யான பழிகளை சுமத்தியும் தேர்தலில் வருவதற்கு நினைக்கின்றனர்.

மாகாணசபையில் வெல்ல முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் வெல்ல முடியவில்லை. இவ்வாறானவர்களே இழி செயல்களை செய்கின்றனர். இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது ஒரு கட்சியின் இளைஞரணி செயலாளரும் அவரது ஊடகமும்.

இவ்வாறானவர்கள் இளைஞர்களை தமக்காக பயன்படுத்தப் பார்ப்பார்கள். இவர்கள் உங்களிடம் வரும் போது அவதானமாக செயற்படுங்கள் என தெரிவித்தார்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! உயிர்த்த ஞாயிறு தாக்குதலை செய்த ISIS தீவிரவாதிகளை சாகும் வரை தூக்கில் தொங்கவிட வேண்டும்!கடும் சீற்றத்தில் மஸ்தான்!

Previous
« Prev Post