நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, May 1, 2019

தாக்குதலுக்குப் பயன்படுத்திய குண்டுகள் உள்நாட்டு உற்பத்தி- சர்வதேச ஊடகத்திடம் ஜனாதிபதி

கடந்த 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அனைத்தும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

“ஸ்கை” சர்வதேச செய்திச் சேவைக்கு ஜனாதிபதி வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளதாக சகோதர ஊடகமொன்று அறிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களின் பின்னால் சர்வதேச சதித் திட்டமொன்று இருப்பதை கூறமுடியுமாகவுள்ளது. தற்கொலை குண்டுதாரி தாக்குதலுக்கு முன்னர் சில நபர்களுடன் கருத்துப் பரிமாற்றம் நடாத்தப்பட்டுள்ளதும், இவர்களுக்கான பயிற்சி, தாக்குதல் திட்டம் குறித்து வெளிநாட்டிலிருந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சிறிய நாடுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்துவது ஐ.எஸ். பயங்கரவாதிகளின் புதிய திட்டம் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.   